பொது செய்தி

தமிழ்நாடு

நாட்டின் விடுதலைக்காக போராடிய கோவை காந்தி: சுதந்திர நாளில் நினைவுகூர்வோம் நம்ம ஊர் தியாகியை

Updated : ஆக 15, 2019 | Added : ஆக 15, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
 நாட்டின் விடுதலைக்காக போராடிய கோவை காந்தி: சுதந்திர நாளில் நினைவுகூர்வோம் நம்ம ஊர் தியாகியை

கோவை:நாட்டின் 73வது சுதந்திர தின விழா, இன்று இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நல்ல நாளில், நம் நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய, எத்தனையோ தியாகிகளுக்கு நன்றி சொல்ல வேண்டியது, ஒவ்வொரு குடிமகனின் கடமை. அந்த வகையில், கோவையில் வாழ்ந்த கோவை கந்தசாமியை பற்றிய பதிவு இது.

'சுதந்திரம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன்' என்று நாட்டுக்கு உழைத்தவர்களில் இவரும் ஒருவர். காந்தியடிகளின் கொள்கைகள், கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்டு, கோவை மாவட்டத்தின் சார்பாக, இந்திய விடுதலை போராட்டத்தில், தன்னை ஈடுபடுத்தி கொண்ட பெருமைக்குரியவர் இவர்.


படிக்கும்போதே சேவை



1915ம் ஆண்டு, கோவை மாவட்டம், காரமடையில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தார். படிக்கும்போதே, கதர் துணிகளை சுமந்து விற்பனை செய்வது, ஏழை எளிய குழந்தைகளின் பகுதிகளுக்கு சென்று சுத்தம் செய்வது போன்ற சேவை ஆற்றினார். காங்கிரஸில் தீவிர ஈடுபாட்டுடன் செயல்பட்டு வந்ததால், கோவை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயலாளராக நியமிக்கப்பட்டார்.

1942ம் ஆண்டு ஆக.,9ம் தேதி, காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டு விட, உடனே காரமடைக்கு சென்று நாட்டு விடுதலைக்காக, துண்டு பிரசுரம் வினியோகித்து பிரசாரம் செய்தார். பிரிட்டிஷ் போலீசார், இவரை கைது செய்தனர்.ஒரு ஆண்டு 9 மாதம் ஜெயில் தண்டனையும், 300 ரூபாய் அபராதம் என தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதன்படி, ஆந்திராவில் உள்ள அலிபுரம் சிறைக்கு மாற்றப்பட்டார். அங்கு இவருடன், கக்கன், செங்காளியப்பன் ஆகியோர் கைதிகளாக இருந்தனர்.சிறையில், ஒரே வார்டில் 600 பேர் தங்க வேண்டிய நிலை, கழிப்பறை வசதியும் இல்லை. அன்றாடம் உணவாக கொடுக்கும் கஞ்சியில் புழுக்களும், பூச்சிகளுமாக ஊர்ந்து கொண்டிருக்கும். அதை அணிந்திருக்கும் சட்டையில் வடித்துதான், குடிக்க வேண்டிய கொடுமையும் இருந்தது.

தண்டனை காலம் முடிந்து, பல்வேறு தடைகளை கடந்து வழக்கறிஞராக உருவெடுத்தார். காமராஜர், வெங்கட்ராமன், சி.சுப்பிரமணியம், பக்தவத்சலம், அவினாசிலிங்கம், பாலசுப்ரமணியம், பிரம்மானந்தரெட்டி, கோபால கிருஷ்ண அய்யர், வெற்றிவேல் முதலியார் உள்ளிட்ட பல தலைவர்களுடன், கடைசி வரை நட்புடன் இருந்தார்.

87 வயதில் உயிர்போகும் நொடி வரை, கதர் ஆடையை தவிர வேறு எந்த ஆடையும் இவர் அணிந்தது இல்லை.இப்படிப்பட்ட தேசபக்தி, ஏழைகளிடத்தில் காட்டிய கருணை போன்ற குணங்களால், இந்திரா ஆட்சி காலத்தில், நிதி அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியம், இவருக்கு கோவை காந்தி என்று புகழாரம் சூட்டிய, பெருமைக்குரிய நிகழ்வு நடந்தது.சுதந்திர தினமான இன்று, கோவை காந்தியை நினைவுகூர்வோம்..

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-ஆக-201912:58:02 IST Report Abuse
நக்கல் இவரை போன்றவர்கள் பலரின் வரலாற்றை வெளிச்சத்துக்கு கொண்டு வரவேண்டும்.... தீயமுகவால் இருட்டடிப்பு செய்யப்பட்ட இவர்கள் போன்றவர்களின் வரலாற்றைத்தான் இனி வரும் தலைமுறைகள் படிக்கவேண்டும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X