கோஹ்லி சதம்:தொடரை வென்றது இந்தியா

Updated : ஆக 15, 2019 | Added : ஆக 15, 2019 | கருத்துகள் (3)
Advertisement
கோஹ்லி சதம்:தொடரை வென்றது இந்தியா

போர்ட் ஆப் ஸ்பெயின்: விண்டீசுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அபராமாக ஆடி 6 விக்கெட் வித்தியாசத்தில் விண்டீசை வீழ்த்தி தொடரை வென்றது.
வீண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றது. இதில் முதல் போட்டி மழையால் ரத்தானது. இரண்டாவது போட்டியில் இந்தியா வென்று இத்தொடரில் 1-0 என முன்னிலையில் இருந்தது. நேற்று மூன்றாவது மற்றும் கடைசி போட்டியில் பங்கேற்றது.
முதலில் டாஸ் வென்ற விண்டீஸ் கேப்டன் ஹோல்டர் பேட்டிங்கை தேர்வு செய்தார். அடிக்கடி மழை குறுக்கிட்டதால் போட்டி 35 ஓவர்களாக குறைக்கப்பட்டது. பேட்டிங் செய்த விண்டீஸ் அணி 35 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் எடுத்தது.தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 32.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. அபராமாக ஆடிய கோஹ்லி 99 பந்துகளில் 114 ரன்கள் எடுத்தார். இவர் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் 43-வது சதத்தை பதிவு செய்தார். இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம் 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றது.


Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-ஆக-201905:41:04 IST Report Abuse
ஸாயிப்ரியா வாழ்த்துக்கள் வீரர்களே.
Rate this:
Share this comment
Cancel
Mani -  ( Posted via: Dinamalar Android App )
15-ஆக-201904:29:01 IST Report Abuse
Mani sathiyamaa naan inimel T20 paaka maaten daa..
Rate this:
Share this comment
Cancel
ManiS -  ( Posted via: Dinamalar Android App )
15-ஆக-201904:27:33 IST Report Abuse
ManiS Poi Vera edhavadu saapidalaame..... world cup vittuttu indha pozhappu.... ungalukku maasam oru Kodi salary... Masada payaluga irukara vara neenga vaazhunga...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X