பெலுகான் அடித்து கொலை வழக்கு:குற்றவாளிகள் 6பேர் விடுதலை

Added : ஆக 15, 2019 | கருத்துகள் (40)
Advertisement
பெலுகான், வழக்கு 6 ,பேர் விடுதலை

ஜெயப்பூர்: ராஜஸ்தானில் பசுக்களை கடத்திச் சென்றதாக பால் வியாபாரி பெலுகானை கும்பல் அடித்து கொன்ற வழக்கில் குற்றவாளிகள் 6 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த பெலுகான், கடந்த 2017-ம் பசுக்களை வேனில் ஏற்றிக் கொண்டு ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நோக்கி சென்றார். ஜெய்ப்பூர் -டில்லி தேசிய நெடுஞ்சாலை அருகே வேனை மறித்த பசு பாதுகாப்பு கும்பல் பெலுகானை பயங்கர ஆயுதங்களால் தாக்கியது.




செல்போனில் எடுக்கப்பட்டஇதன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. காயமடைந்த பெலுகான் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.இது தொடர்பாக ராஜஸ்தான் போலீசார் கொலை வழக்காக பதிந்து 6 பேரை கைது செய்தனர்.

நேற்று இந்த வழக்கு அல்வார் கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி அளித்த தீர்ப்பு, குற்றவாளிகளான 6 பேருக்கும் எதிரான குற்றச்சாட்டுகள் போதிய அளவில் நிரூபிக்கப்படவில்லை. வீடியோவில் இருப்பது அவர்களா என தெளிவாக தெரியவில்லை. எனவே அவர்களை விடுதலை செய்கிறேன். இவ்வாறு தீரப்பளித்தார்.


Advertisement




வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajesh - Chennai,இந்தியா
17-ஆக-201903:49:49 IST Report Abuse
Rajesh எளியவனின் பேச்சு அம்பலம் ஏறாது, DNA கொண்டு சோதனை செய்து பார்க்கலாம், குற்றவாளிகள் மாட்டுவார்கள்.
Rate this:
Share this comment
Cancel
15-ஆக-201914:33:18 IST Report Abuse
நக்கல் ராஜஸ்தான்ல இப்போ காங்கிரஸ் ஆட்சிதானே.. காங்கிரஸ், பிஜேபி விஷயத்தில் இப்படியா நடந்துகொள்ளும்...
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
15-ஆக-201915:32:56 IST Report Abuse
Nallavan Nallavanபாஜக ஆட்சியா இருந்திருந்தா பாஜக தலையிட்டு குற்றவாளிகளை விடுவித்து விட்டது -ன்னு சொல்லலாம் ..... அதுக்கும் சான்ஸ் இல்லாமப் போச்சே...
Rate this:
Share this comment
Cancel
visu - Pondicherry,இந்தியா
15-ஆக-201914:16:14 IST Report Abuse
visu தீர்ப்பு நீங்கள் எதிர் பார்ப்பது போல் வந்தால் சரியான தீர்ப்பு இல்லாவிட்டால் நீதிபதி ஆளும் கட்சியின் அடிமை தேர்தலில் வென்றால் ஜனநாயகம் வென்றது தோற்றால் EVM ஊழல் தலை சுற்றுது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X