பொது செய்தி

தமிழ்நாடு

நீலகிரி மாவட்டத்திற்கு ரூ.30 கோடி ஒதுக்கீடு

Added : ஆக 15, 2019
Share
Advertisement

சென்னை:நீலகிரி மாவட்டத்திற்கு, உடனடி நிவாரண பணிக்காக, 30 கோடி ரூபாயை, மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்க, முதல்வர், இ.பி.எஸ்., உத்தரவிட்டுள்ளார்.

அவரது அறிக்கை:நீலகிரி மாவட்டத்தில், 6ம் தேதி முதல், 10 வரை, கன மழை பெய்தது. இதனால், நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்பட்டது. உடனடியாக, மீட்பு மற்றும் நிவாரண பணிகளில், முழுவீச்சீல் ஈடுபட, மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த, 6,910 பேர் மீட்கப்பட்டு, 67 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

பகுதியாக சேதமடைந்த, 1,225 குடிசைகளுக்கு, தலா, 4,100 ரூபாய்; முழுமையாக சேதமடைந்த, 296 குடிசைகளுக்கு, தலா, 5,000 ரூபாய், உடனடியாக நிவாரணம் வழங்கப்படும். முழுமையாக சேதமடைந்த, குடிசை வீடுகளுக்கு மாற்றாக, பசுமை வீடுகள் திட்டத்தில், புதிய வீடுகள் கட்டித் தரப்படும்.சேதமடைந்த தோட்டக்கலை பயிர்கள் தொடர்பான கணக்கெடுப்பு பணியை, நாளைக்குள் முடித்து, விவசாயிகளுக்கு இடுபொருள் மானியம் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

சேதமடைந்த, 153.34 கி.மீ., நீளமுள்ள சாலைகளில், போக்குவரத்து தற்காலிகமாக சீரமைக்கப் பட்டு உள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட, 55 இடங்களில், 31 இடங்கள் முழுமையாக சீரமைக்கப்பட்டு உள்ளன. சேதமடைந்த உட்கட்டமைப்புகளை, நிரந்தரமாக சீரமைக்க, தேவைப்படும் நிதி தொடர்பான முன்மொழிவுகளை, விரைவாக, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க உத்தரவிடப் பட்டு உள்ளது.மேலும், நீலகிரி மாவட்டத்திற்கு, உடனடி நிவாரணத்திற்காக, 30 கோடி ரூபாய், மாநில பேரிடர் நிவாரண நிதியில் ஒதுக்கீடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X