பொது செய்தி

தமிழ்நாடு

அபாயத்தில் கல்லணை கால்வாய்

Added : ஆக 15, 2019
Share
Advertisement

தஞ்சாவூர்: கல்லணை கால்வாயில் உடைப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளதால், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில், 2.27 லட்சம் ஏக்கர் பாசனம் கேள்விக்குறியாகி உள்ளது.
காவிரி ஆற்றில், கல்லணையில் இருந்து பிரியும், கல்லணை கால்வாயால், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில், 2.27 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன. 337 கிளை வாய்க்கால்களுடன், 1,232 கி.மீ., செல்லும் இந்தக் கால்வாய், 694 பாசன குளங்களுக்கு, நீர் ஆதாரமாக விளங்குகிறது.சீரமைக்கவில்லை. இந்நிலையில், கல்லணை கால்வாயில் செல்லும் தண்ணீர், கடைமடை வரை செல்லுவதில், தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு வருகிறது. 10 ஆண்டுகளாக, கல்லணை கால்வாய் முறையாக சீரமைக்கவில்லை. இதனால், 2018ல், பூதலூர் அருகே கல்விராயன்பேட்டையில், கால்வாயில் உடைப்பு ஏற்பட்டது. ஒரு ஆண்டாக, சீர் செய்யும் பணிகளை துவங்காமல், மேட்டூரில் நேற்று, தண்ணீர் திறந்த பின், உடைப்பு ஏற்பட்ட இடத்தில், 'கான்கிரீட்' சுவர் அமைக்கும் பணிகளை, அவசர கதியில், மூன்று நாட்களுக்கு முன் துவங்கி உள்ளனர்.இதேபோல், கல்யாண ஓடை வாய்க்காலில், 2018 அக்., 8ல், மேலஉளூர் அருகே உடைப்பு ஏற்பட்டது. அதை சீர் செய்யும் பணியையும், கடந்த வாரம் தான், பொதுப்பணி துறை அதிகாரிகள்துவக்கினர். இதேபோல் பல இடங்களில், உரிய பராமரிப்பு இன்றி, கல்லணைக் கால்வாயில் உடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.


தரமிருக்குமா? இதுகுறித்து, பொன்னவராயன்கோட்டையைச் சேர்ந்த, வீரசேனன் கூறியதாவது: வண்ணாரப்பேட்டை, காசாநாடு புதூர் போன்ற இடங்களில், உடைப்பு ஏற்பட்ட இடத்தில் வைக்கப்பட்ட மணல் மூட்டைகள் சரிந்து கிடக்கிறது. கடைமடை பகுதிகளான வெட்டிக்காடு, திருவோணம், ஈச்சன்விடுதி, ஆவுடையார் கோவில் ஆகிய பகுதிகளில், கரைகள் பலமில்லாமல், உடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.ஆற்றில் தண்ணீர் வரும் நிலையில், அவசர கதியில் மேற்கொள்ளும் பணியில், எப்படி தரமிருக்கும்? மேலும், இதை காரணம் காட்டி, தண்ணீர் விடுவதை தாமதிக்க வாய்ப்புண்டு. இதனால், 2.27 லட்சம் ஏக்கர் பாசனம், இந்தாண்டும் கேள்வி குறியாகி உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

'கடைமடைக்கு தண்ணீர் வந்து சேரும்': புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே, சென்னப்பநாயக்கன்பட்டியில் உள்ள, சிறுகுளம் தூர் வாரும் பணியை, சுகாதாரத் துறை அமைச்சர், விஜயபாஸ்கர், நேற்று துவங்கி வைத்தார். அதன்பின், அவர் கூறியதாவது: தமிழகத்தில், குடிமராமத்து திட்டத்திற்கு, 1,250 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, நீர்நிலைகள் தூர் வாரப்பட்டு வருகின்றன. மழை காலத்திற்கு முன், அனைத்து நீர் நிலைகளும் தூர் வாரப்படும். மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ள நிலையில், முதல்வர் அறிவித்துள்ளது போல, கடைமடை பகுதியின் கடைசி வரை, முறையாக தண்ணீர் வழங்கப்படும். காவிரி டெல்டா மாவட்டங்களின் கடைமடைப் பகுதியான, புதுக்கோட்டை மாவட்டம், நாகுடிக்கு, தண்ணீர் வந்து சேரும் என, நம்பிக்கை உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X