பொது செய்தி

இந்தியா

நாட்டிற்கு புதிய சட்டங்கள், சிந்தனைகள் தேவை : மோடி

Updated : ஆக 15, 2019 | Added : ஆக 15, 2019 | கருத்துகள் (36)
Advertisement

புதுடில்லி : நாட்டின் 73 வத சுதந்திர தினத்தை முன்னிட்டு டில்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி, 21 குண்டுகள் முழங்க தேசியக் கொடியை ஏற்றினார்.


தொடர்ந்து நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரையாற்றி பிரதமர் மோடி, டில்லி செங்கோட்டையில் தொடர்ந்து 6 வது முறையாக தேசியக் கொடி ஏற்றும் காங்., அல்லாத 2 வது பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் பா.ஜ.,வை சேர்ந்த வாஜ்பாய் மட்டுமே தொடர்ந்து 6 முறை செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி உள்ளார்.

முன்னதாக மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் பிரதமர் மோடி. தொடர்ந்து செங்கோட்டைக்கு வந்த அவருக்கு முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இவ்விழாவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சுதந்திரத்திற்காக உயிர்தியாகம் செய்தவர்களுக்கு எனது வணக்கங்கள். இன்று ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுகிறது. அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். புதிய அரசு பதவியேற்று மீண்டும் தேசியக் கொடி ஏற்று வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. நாட்டின் சுதந்திரத்திற்காக பலர் தங்களின் வாழ்வை தியாகம் செய்தனர். பலர் தங்களின் இளமை காலத்தை சிறையில் கழித்துள்ளனர். விடுதலைக்காக போராடியவர்களுக்கு எனது வணக்கங்கள்.

முஸ்லீம் தாய்மார்கள், சகோதரிகளின் உரிமைகளுக்காக முத்தலாக் முறை நீக்கப்பட்டது. விவசாயிகளுக்கு 90,000 கோடி நிதியுதுவி அளிக்கப்பட்டுள்ளது. தங்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கும் என விவசாயிகள் கனவு கூட கண்டிருக்க மாட்டார்கள். 60 வயதிற்கு பிறகு கவுரவமாக வாழ இது உதவிகரமாக இருக்கும். வெள்ள துயரை துடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டிற்கு புதிய சட்டங்கள், புதியசிந்தனை தேவை. குழந்தைகள் நலனுக்காகவும் பாலியல் கொடுமைகளுக்கு எதிராகவும் சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

அனைத்து பிரிவினருக்காகவும் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். தொடர் செய்வோம். மக்கள் சேவை ஆற்றி கிடைத்த வாய்ப்பை ஒரு இழையை கூட வீணடிக்காமல் நிறைவேற்றுவோம். நாட்டு மக்களின் ஆதரவால் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்தோம். 2014 தேர்தலுக்கு பிறகு மக்கள் எதிர்பார்த்ததை விட அதிக மாற்றங்களை கொண்டு வந்துள்ளோம். காஷ்மீரில் 370 பிரிவு நீக்கப்பட்டதன் மூலம் வல்லபாய் பட்டேலின் கனவு நினைவாகி உள்ளது.

மோடிக்கு வேண்டியவர்கள் தேர்தலில் போட்டியிடவில்லை. மக்கள் தான் போட்டியிட்டார்கள். 130 கோடி இந்தியர்கள் தங்களின் கனவை நிறைவேற்றுவதற்காக எனக்கு இந்த வாய்ப்பை அளித்துள்ளனர்.

இஸ்லாமிய நாடுகளில் ஏற்கனவே முத்தலாக் தடை செய்யப்பட்டு விட்டது. ஆனால் இந்தியாவில் முத்தலாக் தடை கொண்டு வர தாமதம் ஏன் என புரியவில்லை. பால்ய விவாகத்தை தடை செய்த நம்மால் முத்தலாக்கையம் தடை செய்ய முடியும். எங்கள் அரசு அமைந்து 10 வாரங்களில் 370, 35 ஏ நீக்கப்பட்டது. பிரச்னைகளை இனி வளர்க்கவும் கூடாது. வளர விடவும் கூடாது.
பிரச்னையின் ஆணிவேரை அகற்றுவதே இப்போதைய தேவை. பிரச்னைகளை களைவதில் எங்கள் அரசு ஒருபோதும் தாமதிக்காது. காஷ்மீர் விவகாரத்தில் முந்தைய அரசுகள் எடுத்த நடவடிக்கைகள் தோல்வி அடைந்தன. காஷ்மீர் ஆட்சி செய்தவர்கள் எந்த முன்னேற்றத்தையும் கொண்டு வரவில்லை. கடந்த 70 ஆண்டுகளில் 370 பிரிவு பயங்கரவாதத்தை வளர்த்துள்ளது.370 பிரிவு போன்ற பிரச்னைகளை தொடர்ந்த நாம் வைத்திருக்க முடியாது. ஆதிவாசிகளுக்கு மற்ற மாநிலங்களில் கிடைத்த உரிமை அங்கு கிடைக்கவில்லை. காஜ்மீர் மக்களின் விருப்பத்தை நிறைவேற்றி உள்ளேன்.

ஊழல் நிறைந்த அரசியல் விரைவில் முற்றிலும் ஒழிக்கப்படும். காஷ்மீரில் வசிக்க நினைப்பவர்களுக்கு போதிய உரிமை கிடைக்கவில்லை. 370 பிரிவு நீக்கம் பற்றி எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்தன. எதிர்க்கட்சிகளை பார்த்து காஷ்மீர் மக்கள் கேட்கிறார்கள், தற்காலிகமானது என கூறிவிட்டு 70 ஆண்டுகளாக 370 பிரிவை நீக்காதது ஏன்? இதுவரை இருந்த சட்டங்கள் காஷ்மீர் பெண்களுக்கு எதிராக இருந்தன. இஸ்லாமிய பெண்களுக்கும் சமஉரிமையும், பாதுகாப்பும் கிடைத்துள்ளது. லடாக் மற்றும் காஷ்மீரின் விருப்பங்கள் நிறைவேற்றப்படும். முந்தைய அரசு பயங்கரவாதத்தை ஊக்கப்படுத்தி வந்தது. 370, 35ஏ காஷ்மீர் மக்களின் முன்னேவற்றத்திற்கு தடையாக இருந்தது.

ஒரே நாடு ஒரே அரசியலமைப்பு சட்டம் என்பதை செயல்படுத்தியதில் பெருமிதம் கொள்வோம். தேர்தலில் தோற்றவர்கள் 370 நீக்கத்தை விமர்சித்து வருகின்றனர். நாட்டின் முன்னேற்றத்திற்கு இன்னும் பல புதிய முயற்சிகளை அரசு எடுத்து வருகிறது. ஜிஎஸ்டி மூலம் ஒரே நாடு ஒரே வரி கொண்டு வரப்பட்டுள்ளது. மக்களின் கனவுகளை நிறைவேற்ற இது போன்ற நடவடிக்கைகள் தொடரும். இவ்வாறு தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anandan - chennai,இந்தியா
16-ஆக-201906:35:06 IST Report Abuse
Anandan ஆனா நீங்க கொண்டு வருவது பூரா உளுத்து போன திட்டங்களும், சட்டங்களும் தானே.
Rate this:
Share this comment
Cancel
Babu -  ( Posted via: Dinamalar Android App )
16-ஆக-201906:07:10 IST Report Abuse
Babu மதமாற்ற தடை சட்டம் போலவே, கட்சி தாவல், ஆதரவு வாபஸ் தடை சட்டம். பொது வாழ்வில் ஈடுபட்டு குற்றம் சாட்டப்படுபவர்களுக்கு மயக்க மருந்து சோதனை(Hypnotic analysis), அதிகாரத்தில் இருந்து கொண்டு தவறு செய்பவனுக்கு இரு மடங்கு தண்டனை, அப்படியெல்லாம் கொண்டு வாங்க பாஸ், அறிவுரையோ, சட்டமோ மக்களுக்கு கொண்டு வர்றததுக்கு முன்னால மந்திரிகளுக்கு செயல்படுத்தி முன்னுதாராணமா நிப்பாட்டுங்க பாஸ்.
Rate this:
Share this comment
Cancel
Bharatha Nesan - Chennai,இந்தியா
15-ஆக-201921:06:08 IST Report Abuse
Bharatha Nesan இந்த 73-ஆவது சுதந்திர தினத்தை மகிழ்ச்சியாக கொண்டாடுவதில் பெருமிதம் கொள்வோம், அனைத்துத்தரப்பு மக்களும் கவுரவத்துடனும் வளமுடனும் வாழவும், நமது பாரததேசம் மேலும் மேலும் அனைத்து துறைகளிலும் வளர்ச்சியடைந்து உலக அரங்கில் புகழ்பெற்றுவிளங்க நம் பிஜெபி ஆர்எஸ்எஸ் தலைவர்கள் முழு உடல் ஆரோக்கியத்துடனும் நூறு ஆண்டுகளுக்கு குறையாமல் பலம் மிக்கவர்களாக திகழ்ந்திட பாரதமாதாவிடம் வேண்டுவோம், அன்றன்றாடம் சாமி கும்பிடும் பொழுதும் இறைவனிடம் வேண்டுவோம்.வியாதி போல் நாடு முழுவதும் பரவி இருக்கும் ஊழலை ஒழிப்போம்.லஞ்சம் வாங்க மாட்டேன் கொடுக்கவும் மாட்டேன் என்று சபதம் எடுப்போம்,75-ஆவது சுதந்திர தினம் கொண்டாடும் போது நாட்டில் ஊழல் இருக்கக் கூடாது, நன்றி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X