பொது செய்தி

இந்தியா

நீரின்றி அமையாது உலகு : வள்ளுவரை நினைவுகூர்ந்த மோடி

Updated : ஆக 15, 2019 | Added : ஆக 15, 2019 | கருத்துகள் (64)
Share
Advertisement

புதுடில்லி : சுதந்திர தின உரையின் போது தண்ணீர் பிரச்னை பற்றி பேசிய பிரதமர் மோடி திருவள்ளுவரின் குறளை மேற்கோள் காட்டி பேசினார்.



latest tamil news



சுதந்திர தின உரையின் போது தண்ணீர் பிரச்சனை குறித்து பிரதமர் மோடி பேசினார். அப்போது திருக்குறளை மேற்கோள் காட்டினார்.

மோடி தனது உரையில், வறுமையை ஒழித்து விட்டால் மக்கள் அரசின் உதவியை எதிர்பார்க்க வேண்டியதில்லை. இன்றளவும் தண்ணீர் வசதி இல்லாத வீடுகள் உள்ளன. நீண்ட தூரம் நடந்த சென்று தண்ணீர் கொண்டு வரும் நிலை உள்ளது. கடந்த கால அரசுகள் ஏழை மக்கள் பற்றி கவலைப்படவில்லை. நீர் பிரச்னையை தீர்க்க ஜல் ஜீவன் என்ற புதிய திட்டத்தை அறிவிக்கிறேன். ஜல் ஜீவன் திட்டத்திற்கு நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

திருவள்ளுவர் கூறியது போல், "நீரின்றி அமையாது உலகு". 70 ஆண்டுகளில் செய்யாததை 4 ஆண்டுகளில் செயல்படுத்துவோம். விவசாயம், குடிநீர் திட்டங்களுக்காக ரூ.3.5 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இளைஞர்களிடையே தண்ணீரின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மக்களின் ஆதரவை கருத்தில் கொண்டு பயணிக்க வேண்டிய தருணம் இது. பல வருடங்களுக்கு முன் ஜெயின் முனிவர், தண்ணீர் விற்பனை செய்யப்படும் என்றார். அவரின் வாக்கு இப்போது பலித்துக் கொண்டிருக்கிறது.


latest tamil news


வீடுகளுக்கு தண்ணீர் கொண்டு வரும் தண்ணீர் திட்டத்திற்காக ரூ.3.50 லட்சம் கோடி ஒதுக்கப்படும். மக்கள் தொகை பெருக்கம் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தி வருகிறது. புதிதாக பிறக்கும் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு திட்டமிட வேண்டும். மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து மக்கள் நலனுக்காக பணியாற்ற வேண்டும்.

வியாதி போல் நாடு முழுவதும் பரவி இருக்கும் ஊழலை ஒழிப்போம். 1450 பழைய சட்டங்கள் நீக்கப்பட்டு, மக்கள் மீதான சுமை குறைக்கப்பட்டுள்ளது. குடும்பக் கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு அனைவரிடமும் ஏற்பட வேண்டும். தேவையற்ற சட்டங்கள் நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போதும் உலகம் இந்தியாவின் ஆற்றலை தெரிந்து கொண்டுள்ளது. 75 சுதந்திர தினம் கொண்டாடும் போது நாட்டில் ஊழல் இருக்கக் கூடாது என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (64)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
16-ஆக-201917:06:09 IST Report Abuse
J.Isaac இந்தியாவிற்கு கிடைத்த திறமையான பேச்சாளர் என பெருமை கொள்வோம்
Rate this:
Cancel
Babu -  ( Posted via: Dinamalar Android App )
16-ஆக-201905:26:25 IST Report Abuse
Babu "சீமான்"கள் கத்தும் முன் எத்தனை பேர்கண்டு கொண்டனர். தண்ணீரையும், தமிழையும், குறளையும்.
Rate this:
Cancel
திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன் "மக்கள் தொகை பெருக்கம் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தி வருகிறது" அடுத்த டார்ஜெட் கட்டாய கருத்தடை?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X