பொது செய்தி

தமிழ்நாடு

வேலூர் 3 மாவட்டங்களாக பிரிகிறது: முதல்வர்

Updated : ஆக 15, 2019 | Added : ஆக 15, 2019 | கருத்துகள் (38)
Share
Advertisement

சென்னை : நாட்டின் 73 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடியை ஏற்றினார். முன்னதாக காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.



latest tamil news




தேசியக் கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின உரையை நிகழ்த்திய முதல்வர் பழனிசாமி, சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளை வணங்குகிறேன். தமிழகத்தில் இந்தியை திணிக்கக் கூடாது. இரு மொழிக் கொள்கை என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. இந்தியை திணிக்கும் முயற்சிகளை முறிடிக்க தீவிரமாக உள்ளோம். பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகளை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும். தண்ணீர் பிரச்னையை எதிர்கொள்ள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.


latest tamil news




வேலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், ராணிப்பேட்டை பிரிக்கப்பட்டு தனி மாவட்டங்களாக மாற்றப்படும். நிர்வாக வசதிக்காக வேலூர் மாவட்டம் பிரிக்கப்பட்டுள்ளது. சுதந்திரப் போராட்ட தியாகிகளின் ஓய்வூதியம் ரூ.15,000 லிருந்து ரூ.16,000 ஆக உயர்த்தப்படும். சுதந்திர போராட்ட ஓய்வூதியதாரர்களின் வாரிகளுக்கான உதவித்தொகை ரூ.7500 லிருந்து ரூ.8000 ஆக உயர்த்தப்படும் என்றார்.


விருது வழங்கினார்

தொடர்ந்து சிறந்த மாநகராட்சிக்கான விருதை சேலம் மாநகராட்சிக்கு முதல்வர் விருது வழங்கினார். சிறந்த நகராட்சிக்கான விருது தர்மபுரிக்கும், 2வது இடத்திற்கான விருதை வேதாரண்யம், 3வது இடத்திற்கான விருது அறந்தாங்கிக்கும் வழங்கப்பட்டது. சிறந்த பேரூராட்சிக்கான விருது மதுரை டி.கல்லுப்பட்டிக்கு வழங்கப்பட்டது. மேலும்,நன்னிலம், பவானிசாகர் பேரூராட்சிகளும் விருது வாங்கின.

Advertisement




வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Naren - Chennai,இந்தியா
15-ஆக-201921:14:24 IST Report Abuse
Naren வேலூர் மாவட்டம் கார்ப்பரேஷன் அந்தஸ்தை இழக்க வாய்ப்புள்ளது.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
15-ஆக-201920:02:17 IST Report Abuse
Ramesh Sargam மூன்று மாவட்டங்களாக பிரிப்பது சரியில்லை. தவிர்க்கவேண்டும்.
Rate this:
Cancel
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
15-ஆக-201919:21:08 IST Report Abuse
தமிழ் மைந்தன் ஜெயமுருகன் என்ற பினாமியின் வருமானத்திற்கு பதில் தயாரிப்பதில் கம்பெனி தீவிரமாக உள்ளது..........இதற்கு பதில் கொடுக்கப்பட்டதும்......அடுத்த பினாமி கம்பெனியில் ரைடு.......ஓகே......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X