370 நீக்கம் காஷ்மீர் வளர்ச்சிக்கானது : கவர்னர்

Updated : ஆக 15, 2019 | Added : ஆக 15, 2019 | கருத்துகள் (11)
Advertisement

ஸ்ரீநகர் : நாட்டின் 73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஸ்ரீநகரில் உள்ள ஷெர் ஐ காஷ்மீர் மைதானத்தில் நடந்த விழாவில் அம்மாநில கவர்னர் சத்யபால் மாலிக், மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்தார்.







பின்னர் உரையாற்றிய அவர், மத்திய அரசு கொண்டு வந்த மாற்றங்கள் வெறும் வரலாற்று சிறப்புமிக்கது மட்டுமல்ல. 370 சட்டப்பிரிவு நீக்கம் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் மக்களின் வளர்ச்சிக்கு புதிய கதவை திறந்து விட்டுள்ளது. காஷ்மீர் மக்களின் அடையாளங்கள் பறிக்கப்படவோ, அழிக்கப்படவோ இல்லை என்பதை மக்களுக்கு நான் உறுதி அளிக்கிறேன். அதே சமயம் இந்திய அரசியலமைப்பு சட்டம் பல்வேறு விதமான பிராந்தியங்களின் அடையாளங்கள் வளர வழிவகுக்கிறது என்றார்.






முன்னதாக வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றார். மக்கள் உற்சாகமாக தேசியக் கொடியை கையில் ஏந்தியபடி இந்த சுதந்திர தின கொண்டாட்ட விழாவில் கலந்து கொண்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
15-ஆக-201922:51:25 IST Report Abuse
Rajagopal அடுத்து செய்ய வேண்டியது பாகிஸ்தானை துண்டாக்குவது. பலூசிஸ்தான், பஷ்ட்டூனிஸ்ட்டான், சிந்து தேஷ் என்று சிறிய நாடுகளாகி விட்டால், மிஞ்சி இருக்கும் பஞ்சாபி பாகிஸ்தான் வாலை ஆட்டாது. இது நடந்தால்தான் காஷ்மீர் அமைதியாக இருக்கும். ஏற்கனவே 1971 இல் வங்காள தேசம் பிரிந்து விட்டது. இன்னும் மீதி இருப்பதை முடித்தால் ஜின்னாவின் கனவும் நிறைவேறும்.
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
15-ஆக-201920:02:45 IST Report Abuse
Lion Drsekar இதே போன்று நாடு முழுவதும் சட்டம் கொண்டு வந்தால் மட்டுமே ஜனநாயகம் செழிக்கும், தற்போது இறந்து போன மனித நேயத்தை இது போன்ற சட்டங்கள் கொண்டு வந்து மனித நேயத்தை நிலை நிறுத்தி சமூக விரோதிகள் கைகளில் இருந்து மீட்டு மனிதர்களிடம் ஒப்படைத்தால் மட்டுமே ஜனநாயகம் செழிக்கும், வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
15-ஆக-201912:48:54 IST Report Abuse
Rafi 370 நீக்கம் என்பது புதிய வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளது என்று அவருக்கு திணிக்கப்பட்ட கருத்தை தெரிவித்துள்ளார். அம்மாநில மக்கள் நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்தே சுதந்திரத்தை கொஞ்சம்மாக இழந்தார்கள். 1987 அப்போதைய கவர்னர் உடைய அதிரடி நடவடிக்கையிலிருந்து முழுவதும் இழந்து விட்டார்கள், அதற்கு காரணம் காங்கிரசிற்கு பெரும் பங்குண்டு, அப்போதையிலிருந்து ராணுவ கட்டுப்பாட்டிலேயே அம்மாநிலம் இருந்து வந்துள்ளது. இருப்பினிலும் அங்குள்ள மக்கள் ஆட்சியின் மூலம் நம் தேச பெரும்பான்மையான மாநில வளர்ச்சியை விட அது வளர்ந்தே இருந்தது. மிகைப்படுத்தி பார்க்கும் குஜராத் மாநிலத்தை விட வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களை கணக்கெடுக்கும் போது குஜராத் 16 .5 சதவிகிதம், ஆனால் காஸ்மீரில் 10 .7 சதவிகிதம் மட்டுமே, கல்விவளர்ச்சியில் பள்ளி படிப்பை முடிக்காதவர்களை எடுத்து கொண்டால் கூட குஜராத்தை விட அங்கு சதவிகிதம் குறைவு என்பது அறிய முடியும். பீகார், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் உ பியோடு ஒப்பீட்டால் அது வளர்ச்சி பெற்ற மாநிலமே. இப்போது 370 நீக்கியது நமக்கு வேண்டுமானால் சரி என்பது போல் தெரியும், அதற்கு முறைப்படி அம்மாநில மக்களின் அங்கீகாரத்தை பெற்று இருந்தால், அது ஜனநாய வழி ஆகியிருக்கும். அரசு தரப்பு செய்திகள் மட்டுமே வருகின்றது, அங்கு என்ன நடக்கின்றது என்ற தகவல் கிடையாது, தொலை பேசி சேவைகள் கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
Rate this:
Share this comment
15-ஆக-201914:21:07 IST Report Abuse
ஓரிஇந்தியா இந்து நாடு ஆக வேண்டும் என்று பல காலம் கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள். உன் கருத்து படி மக்கள் கிட்ட ஒரு கருத்து கணிப்பு நடத்தி இந்தியாவை அப்படி அறிவித்து விடலாமா?...
Rate this:
Share this comment
Rafi - Riyadh,சவுதி அரேபியா
15-ஆக-201919:57:54 IST Report Abuse
Rafi இந்தியாவில் சுதந்திரத்திற்காக பாடுபடும்போது இஸ்லாமியர்கள் அவர்களின் சராசரிக்கு மேல் அதில் இணைத்து தான் பாடுபட்டார்கள் என்பதை, காந்திஜியும், நேருஜி, சுபாஷ் சந்திரபோசும் மற்றும் முன்னணியினர்களும் நன்கு அறிந்திருந்ததனால் இந்து தேசம் என்று அறிவிக்கவில்லை, அவர்களுக்கு தெரியும், பொருளாதாரம், மற்றும் பங்களிப்புகளில் இஸ்லாமியர்களின் பங்கு அபரிமிதம் என்பதை புரிந்திருந்தார்கள். காஸ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக சுதந்திரம் பெற்றபோது இணையவில்லை. மன்னர் ஹரிசிங், மற்றும் ஷேக் அப்துல்லாஹ் உடைய வேண்டுகோளுக்கு இணங்க அவர்களுக்கு இச்சலுகை வழங்கப்பட்டது. அதை நீக்கும் அதிகாரம் அம்மக்களின் விருப்பத்திற்கிணங்க நடக்கும் என்ற விதிமுறை இருக்கு....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X