பொது செய்தி

தமிழ்நாடு

மியாவாக்கி முறையில் 2,000 மரக்கன்றுகள் நடவு

Added : ஆக 15, 2019
Advertisement

சேந்தமங்கலம்: மாவட்ட மருத நில மக்கள் இயக்கம் சார்பில், மியாவாக்கி முறையில், 2,000 மரக்கன்றுகள் நடவு செய்யும் விழா, முத்துகாப்பட்டி ஊராட்சி, மேதரமாதேவியில் நடந்தது. இயக்க ஒருங்கிணைப்பாளர் அருள்ராஜேஷ் தலைமை வகித்தார். மருது, கடம்பு, வேங்கை, மகிழம், மகாகணி, தான்றிக்காய், மலைவேம்பு, மந்தாரை, சொர்க்கம், புங்கன், பூவரசு, இயல்வாகை. செண்பகம், தண்ணீர் காய், வில்வம், யானை குண்டு மணி, தூங்கவாகை, புளி, தாழிசந்தர், ரோஷியா, பெருநெல்லி, மாதுளை, நாவல், கொய்யா, மரமல்லி, பாதாம், நெட்டிலிங்கம் போன்ற, 30 வகையான மரக்கன்றுகள் நடப்பட்டன.
இது குறித்து, ராஜேஷ் கூறியதாவது: இந்த முறையில், அடர் காடானது, நுண்ணுயிர், தேனீக்கள், பறவைகளுக்கு வாழ்விடம் மற்றும் உணவிடமாக அமையும். மனிதர்களுக்கு துவர்ப்பு, கசப்பு, இனிப்பு, புளிப்பு, நீர்ச்சத்து உள்ள ஆதாரம் தேவை படுகிறதோ, இந்த அடர்வன காட்டை நோக்கி வரும் உயிரினங்களுக்கும் கிடைக்க வேண்டும் என, மரக்கன்றுகளை தேர்வு செய்துள்ளோம். இந்த அடர்வனமே, பின்னாளில் மழை ஈர்க்கும் மையமாக அமையும் என்பதனாலேயே, இந்த மியாவாக்கி முறையை தேர்ந்தெடுத்துள்ளோம். மாவட்டம் முழுவதும், சிறு சிறு அடர் வனங்களை உருவாக்க உள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார். மேதரமாதேவி, முத்துக்காப்பட்டி பள்ளி மாணவ, மாணவியர், பொதுமக்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X