பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மீண்டும் நாமக்கல் வருகை

Added : ஆக 15, 2019
Advertisement

நாமக்கல்: லோக்சபா தேர்தல் முடிந்ததையடுத்து, மாவட்ட தாலுகா அலுவலகங்களில் வைக்கப்பட்டிருந்த ஓட்டுப்பதிவு இயந்தரங்கள், மீண்டும் நாமக்கல் கொண்டு வரப்பட்டன.
நாமக்கல் மாவட்டத்தில், 1,621 ஓட்டுச்சாவடிகளில் லேக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு நடந்தது. அங்கு பயன்படுத்தப்பட்ட ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், தாலுகா அலுவலகங்களில் வைக்கப்பட்டன. சப்-கலெக்டர் அலுவலகத்தில், நாமக்கல் மற்றும் சேந்தமங்கலம் சட்டசபை தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. தற்போது ராசிபுரம், திருச்செங்கோடு, குமாரபாளையம் மற்றும் ப.வேலுர் தாலுகா அலுவலகங்களில் வைக்கப்பட்டிருந்த இயந்திரங்களை, சப்-கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு வரும் பணியில் வருவாய் துறையினர் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில், நேற்று, ராசிபுரம் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட, 532 இயந்திரங்கள், சப்-கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டன. கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் வி.வி.பேட் இயந்திரங்கள் ஏற்கனவே கொண்டு வரப்பட்டு விட்டன. அவற்றில் தலா, 1,600 இயந்திரங்கள், மத்திய பிரதேசம் அனுப்பப்பட்டிருப்பதாகவும், ஓட்டுப்பதிவு இயந்திரங்களை பொறுத்த வரை, மாவட்டத்தில், 3,381 இருப்பு வைத்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X