பொது செய்தி

தமிழ்நாடு

நாமக்கல் நகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்க கருத்து கேட்பு கூட்டம்

Added : ஆக 15, 2019
Advertisement

நாமக்கல்: நாமக்கல் தாலுகா, வள்ளிபுரம் மற்றும் வகுரம்பட்டி ஊராட்சிகளை, நாமக்கல் நகராட்சியுடன் இணைத்து, நகராட்சி எல்லையை விரிவாக்கம் செய்வது தொடர்பான மக்கள் கருத்தறியும் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் ஆசியா மரியம் தலைமை வகித்தார். சம்பந்தப்பட்ட ஊராட்சிகளை சேர்ந்த அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்களை சார்ந்தோர், குடியிருப்பு சங்கங்களை சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர். அப்போது, தங்களது கருத்துகளை நேரடியாகவும், எழுத்து மூலமும் கலெக்டரிடம் அளித்தனர். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, ஊராட்களின் உதவி இயக்குனர் மணிவண்ணன், கமிஷனர் சுதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.* பின்னர், 'நாமக்கல் நகராட்சியுடன், வகுரம்பட்டியை இணைக்கக் கூடாது' என, அக்கிராம மக்கள், கலெக்டர் ஆசியா மரியத்திடம் மனு அளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X