பொது செய்தி

தமிழ்நாடு

குழந்தை விற்பனை வழக்கு: 4 பேருக்கு காவல் நீட்டிப்பு

Added : ஆக 15, 2019
Advertisement

நாமக்கல்: குழந்தைகளை விற்பனை செய்த வழக்கில், ராசிபுரத்தை சேர்ந்த அமுதவல்லி, அவர் கணவர் உள்ளிட்ட, எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கு, சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றப்பட்டதையடுத்து, சேலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய உதவி செவிலியர் சாந்தி, பெங்களூரு அழகு கலை நிபுணர் ரேகா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும், டிரைவர் நந்தகுமார், திருச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தார். இவ்வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட, 11 பேரும், மூன்று மாதங்களாக, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். ஆக., 1ல், அமுதவல்லி உள்ளிட்ட, நான்கு பேர், அடுத்த ஓரிரு நாட்களில், மற்ற, நான்கு பேர் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். சேலம் உதவி செவிலியர் சாந்தி, நந்தகுமார், இடைத்தரகர்கள் செல்வி, ரேகா ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். நான்கு பேருக்கும், நீதிமன்ற காவல் முடிந்ததையடுத்து, நேற்று, நாமக்கல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வரும், 28 வரை நீதிமன்ற காவலை நீட்டித்து, நீதிபதி லதா உத்தரவிட்டார். இதற்கிடையே சாந்தி, செல்வி இருவரும், ஜாமின் கேட்டு நீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர். ஆனால், அவர்களுக்கு ஆதரவாக முன்மொழிய யாரும் வராததால், ஒரு வாரமாக ஜாமின் மனு காத்திருப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X