சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பயணிகளிடம் மடிக்கணினி திருட்டு: 3 பேர் கைது

Added : ஆக 15, 2019
Advertisement

நாமக்கல்: நாமக்கல் பஸ் ஸ்டாண்டில், கடந்த, 16ல், இலுப்புலி மூலப்பாளையத்தை சேர்ந்த பிரேம்குமார், சேலம் செல்ல அரசு பஸ்சில் ஏறினார். அவரிடமிருந்த, 15 ஆயிரம் மதிப்புள்ள மடிக்கணினி மாயமானது. ஜூலை, 21ல், மணச்சநல்லூர் கல்பாளையம் ஜியாவுதின், சேலத்தில் இருந்து, அரசு பஸ்சில் நாமக்கல் வந்தபோது, 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மடிக்கணினி காணாமல் போனது. ஜூலை, 26ல், திருச்சியிலிருந்து, அரசு பஸ்சில், நாமக்கல் வந்த திருச்சி ராமலிங்கா நகரை சேர்ந்த, மெர்வின் ஆண்டனியின், 20 ஆயிரம் ரூபாய் மடிக்கணினி மாயமானது. கடந்த, 3ல், சமயபுரத்தை சேர்ந்த கோபிநாத், சேலத்தில் இருந்து அரசு பஸ்சில் நாமக்கல் வந்தபோது, 20 ஆயிரம் ரூபாய் மடிக்கணினி திருடப்பட்டது. நாமக்கல் குற்றப் பிரிவு எஸ்.ஐ., சந்திரன் தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டது. நேற்று காலை, 10:00 மணிக்கு, சேலம் கருங்கல்பட்டியை சேர்ந்த சபரீஸ்வரன், திருச்சியில் இருந்து, அரசு பஸ்சில் நாமக்கல் வந்தபோது, 20 ஆயிரம் ரூபாய் மடிக்கணினி திருடப்பட்டது என, புகார் செய்தார். வழக்கு பதிந்த போலீசார், பஸ் ஸ்டாண்டில் சந்தேக நபர்களை கண்காணித்தனர். அப்போது, மடிக்கணினி பேக்குடன் நின்ற, திருச்சி, புதிய காட்டூர் புங்கனூரை சேர்ந்த கண்ணன், 44, முத்துக்குமரன், 41, சண்முகம், 43, ஆகியோரை விசாரித்தனர். அதில், திருடியதை ஒப்புக் கொண்டனர். அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து, ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள, ஐந்து மடிக்கணிகளை பறிமுதல் செய்தனர். தனிப்படையினரை, எஸ்.பி., அருளரசு பாராட்டினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X