பொது செய்தி

இந்தியா

சுதந்திர தினம்: எம்.பி., உற்சாக நடனம்

Updated : ஆக 15, 2019 | Added : ஆக 15, 2019 | கருத்துகள் (19)
Share
Advertisement
IndependenceDayIndia, IndependenceDay2019,லடாக், எம்.பி., நடனம், சுதந்திர தினம்,

புதுடில்லி: சுதந்திர தின விழாவை, லடாக் தொகுதி பா.ஜ., எம்.பி., ஜம்யங் ஷெரீங் நம்ஜியால், நண்பர்களுடன் நடனமாடி கொண்டாடினார்.

காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது. இந்த மசோதா மீதான விவாதத்தின் போது, லடாக் தொகுதி எம்.பி.,யான பா.ஜ.,வை சேர்ந்த ஜம்யங் ஷெரீங் நம்ஜியால் பேசினார். காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து காரணமாக லடாக் பகுதி வளர்ச்சி பெறவில்லை. சிறப்பு அந்தஸ்து நீக்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்தும் ஒமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர், மாநிலத்தை, குடும்ப தொழிலுக்காக பயன்படுத்தினர். அந்தஸ்து நீக்கப்பட்டால், அவர்களின் தொழில் பாதிக்கப்படும் என்றார். அவரது பேச்சிற்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்தனர். மேலும், அவருக்கு நாடு முழுவதும் புகழை ஏற்படுத்தி கொடுத்தது. சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.


காஷ்மீர் மாநிலம் லேயில் நடந்த சுதந்திர தின விழாவில் ஜம்யங் பங்கேற்றார். பாரம்பரிய உடையுடன், வந்த அவர், நண்பர்களுடன் இணைந்து நடனமாடி சுதந்திர தினத்தை கொண்டாடினார்.

latest tamil news





இந்நிலையில், காஷ்மீர் மாநிலம் லேயில் நடந்த சுதந்திர தின விழாவில் ஜம்யங் ஷெரீங் நம்ஜியால் பங்கேற்றார். அரக்கு நிறத்தில், லடாக் பகுதி ஆண்கள் அணியும் பாரம்பரிய உடையுடன், கண்ணாடியுடன் காணப்பட்ட அவர், நண்பர்களுடன் இணைந்து நடனமாடி சுதந்திர தினத்தை கொண்டாடினார். தொடர்ந்து பாரம்பரிய இசைக்கருவிகளையும் அவர் இசைத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramki - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
16-ஆக-201900:25:30 IST Report Abuse
Ramki இவர், இனிமேல் சில வருஷங்கள் லடாக் பகுதியில் கொண்டுவரவேண்டிய சமூக உள்கட்டமைப்பு , சாலைவசதி மேம்பாடு, பொருளாதாரத்துடன் கூடிய முன்னேற்றம் போன்றவற்றில் தன்னை முற்றிலும் ஈடுபடுத்திக்கொண்டு அர்ப்பணிப்போடு செயல் பட்டு அப்பகுதி மக்களின் கனவை நிறைவேற்ற வேண்டும்.அதனை திறம்பட செய்யக்கூடிய ஆற்றலும், துடிப்பும் இவரிடம் நிறையவே உள்ளதை பாராளுமன்ற பேச்சின்போது பறைசாற்றினார்..அவர்கள் கனவு விரைவில் நிறைவேற எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்.
Rate this:
Cancel
balakrishnan - Mangaf,குவைத்
15-ஆக-201921:40:17 IST Report Abuse
balakrishnan நல்ல எதிர்காலம் இந்த MP க்கு இருக்கிறது .
Rate this:
Cancel
Bharatha Nesan - Chennai,இந்தியா
15-ஆக-201921:11:10 IST Report Abuse
Bharatha Nesan இந்த 73-ஆவது சுதந்திர தினத்தை மகிழ்ச்சியாக கொண்டாடுவதில் பெருமிதம் கொள்வோம், அனைத்துத்தரப்பு மக்களும் கவுரவத்துடனும் வளமுடனும் வாழவும், நமது பாரததேசம் மேலும் மேலும் அனைத்து துறைகளிலும் வளர்ச்சியடைந்து உலக அரங்கில் புகழ்பெற்றுவிளங்க நம் பிஜெபி ஆர்எஸ்எஸ் தலைவர்கள் முழு உடல் ஆரோக்கியத்துடனும் நூறு ஆண்டுகளுக்கு குறையாமல் பலம் மிக்கவர்களாக திகழ்ந்திட பாரதமாதாவிடம் வேண்டுவோம், அன்றன்றாடம் சாமி கும்பிடும் பொழுதும் இறைவனிடம் வேண்டுவோம்.வியாதி போல் நாடு முழுவதும் பரவி இருக்கும் ஊழலை ஒழிப்போம்.லஞ்சம் வாங்க மாட்டேன் கொடுக்கவும் மாட்டேன் என்று சபதம் எடுப்போம்,75-ஆவது சுதந்திர தினம் கொண்டாடும் போது நாட்டில் ஊழல் இருக்கக் கூடாது, நன்றி
Rate this:
B.s. Pillai - MUMBAI,இந்தியா
16-ஆக-201904:31:14 IST Report Abuse
B.s. PillaiMr.Bharatha Nesan, You are the most fit person to be the future C.M. of Tamil Nadu....
Rate this:
B.s. Pillai - MUMBAI,இந்தியா
16-ஆக-201905:02:21 IST Report Abuse
B.s. PillaiTamil Nadu people, and DMK which d itself the only saviour of our Tamil language, have to be ashamed that out of 38 M.P.s elected this time to the Lok Sabha are Telugu origin people. Whereas this Ladak M.P. is the youngest and has been elected by his land for his service and principle oriented to develop his land which was devoid of any facilities for last 72 years. When I went there in 1980s, there was not even one public toilet and I had to go behind a temporary shed shop to relieve myself . They are the people who are very innocent and very friendly people. I hope and wish that this young M.P. fulfils the dreams of his people , with schools, colleges, roads and airports and dwelings which can withstand the sevee weather conditions prevailing there.Let us all give our full support for his development activities....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X