பொது செய்தி

இந்தியா

ராணுவ வீரர்களுடன் தோனி சந்திப்பு

Added : ஆக 15, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
dhoni,தோனி, லடாக், ராணுவ வீரர்கள்

லடாக்: சுதந்திர தினத்தை முன்னிட்டு, லடாக்கிற்கு சென்ற தோனி, ராணுவ வீரர்களை சந்தித்தார்.

இந்திய கிரிக்கெட் அணி வீரர் தோனி 38. கடந்த 2011 முதல் துணை ராணுவ படையின் பாராசூட் பிரிவில் கவுரவ 'லெப்டினென்ட்' கர்னல் ஆக உள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் ஓய்வு எடுத்து கொண்ட தோனி, காஷ்மீர் சென்று ராணுவ வீரர்களுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது,வீரர்களுடன் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டது, வாலிபால் விளையாடியது போன்ற புகைப்படங்கள் வெளியாகின.

இந்நிலையில், நாட்டின் 73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, லடாக் சென்ற தோனி, ராணுவ வீரர்களை சந்தித்தார். இதற்காக நேற்று(ஆக.,14) லடாக் சென்ற தோனிக்கு, ராணுவ வீரர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, ராணுவ மருத்துவமனைக்கு சென்ற தோனி, அங்கு சிகிச்சை பெறுபவர்களுடன் கலந்துரையாடினார். ராணுவ வீரர்களுடன் தோனி கலந்துரையாடும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவின. தொடர்ந்து தோனி சியாச்சின் செல்ல உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumar.s. - bangalore,இந்தியா
16-ஆக-201913:17:19 IST Report Abuse
kumar.s. பேசுவதை குறைத்து செயலை கூட்ட வேண்டிய தருணம் இது. நாட்டின் பொருளாதாரம், இளைஞரகள் வேலை வாய்ப்புகள் சரிந்துவருகிறது. ரபால் டீல் சம்பந்தப்பட்ட கேள்விகள் இன்னும் அப்படியே இருக்கிறது. நற்பெயரை காத்துக்கொள்ள இன்னும் நிறைய செய்யவேண்டியுள்ளது. இன்னும் பாஸ் மார்க் வாங்கவில்லை என்பதே நிதர்சனம்.
Rate this:
Cancel
Bharatha Nesan - Chennai,இந்தியா
15-ஆக-201921:09:24 IST Report Abuse
Bharatha Nesan இந்த 73-ஆவது சுதந்திர தினத்தை மகிழ்ச்சியாக கொண்டாடுவதில் பெருமிதம் கொள்வோம், அனைத்துத்தரப்பு மக்களும் கவுரவத்துடனும் வளமுடனும் வாழவும், நமது பாரததேசம் மேலும் மேலும் அனைத்து துறைகளிலும் வளர்ச்சியடைந்து உலக அரங்கில் புகழ்பெற்றுவிளங்க நம் பிஜெபி ஆர்எஸ்எஸ் தலைவர்கள் முழு உடல் ஆரோக்கியத்துடனும் நூறு ஆண்டுகளுக்கு குறையாமல் பலம் மிக்கவர்களாக திகழ்ந்திட பாரதமாதாவிடம் வேண்டுவோம், அன்றன்றாடம் சாமி கும்பிடும் பொழுதும் இறைவனிடம் வேண்டுவோம்.வியாதி போல் நாடு முழுவதும் பரவி இருக்கும் ஊழலை ஒழிப்போம்.லஞ்சம் வாங்க மாட்டேன் கொடுக்கவும் மாட்டேன் என்று சபதம் எடுப்போம்,75-ஆவது சுதந்திர தினம் கொண்டாடும் போது நாட்டில் ஊழல் இருக்கக் கூடாது, நன்றி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X