233 பேரின் உயிரை காத்த விமானிக்கு குவியும் பாராட்டு

Updated : ஆக 15, 2019 | Added : ஆக 15, 2019 | கருத்துகள் (14)
Share
Advertisement
ரஷ்யா, விமானம், விமானி

மாஸ்கோ: ரஷ்யா தலைகர் மாஸ்கோவில் இருந்து, 233 பேருடன் கிளம்பிய விமானம் மீது பறவை மோதியது. இதனால்,விமான என்ஜீன் செயலிழந்ததால், சோளம் விதைத்த நிலத்தில் விமானத்தை பத்திரமாக தரையிறக்கி, பயணிகளின் உயிரை காத்த விமானிக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து கிரிமியாவில் உள்ள சிம்பெரோபோல் என்ற நகருக்கு 233 பயணிகளுடன் யுரல் விமான நிறுவனத்திற்கு சொந்தமான ஏர்பஸ் 321 விமானம் கிளம்பியது. சிறிது நேரத்தில் விமானம் மீது பறவை மோதியது. இதனால், விமானத்தை உடனடியாக, மாஸ்கோ புறநகரில் உள்ள சோளம் பயிரிடப்பட்ட நிலத்தில் விமானி தரையிறக்கினார். உடனடியாக விமானத்தின் என்ஜீன்கள் தானாக அணைந்தன. இதில், 23 பேர் காயமடைந்துள்ளனர். ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமானத்தை பத்திரமாக தரையிறக்கி, 233 பேரின் உயிரை காப்பாற்றிய விமானி டாமிர் யுசுபோவிற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அவரை, அந்நாட்டு மீடியாக்கள் 'ஹீரோ' எனவும், இன்ஜீன் செயலிழந்த நிலையில், தரையிறக்கும் கியர் இல்லாமல், விமானத்தை பத்திரமாக தரையிறக்கி, 233 பேரின் உயிரை காப்பாற்றிவிட்டார் என புகழ்ந்துள்ளன.


latest tamil news




பயணி ஒருவர் கூறுகையில், விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில், விமானத்தில் இருந்த விளக்குகள் அணைந்து அணைந்து எரிய துவங்கின. கருகும் வாசனை வந்தது. விமானம் தரையிறங்கிய உடன் அனைவரும் ஓடிவந்துவிட்டனர் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-ஆக-201905:35:24 IST Report Abuse
அருணா பாராட்டுக்கள் . ஆபத்பாந்தவன். நிஜமான காப்பான்.
Rate this:
Cancel
Babu -  ( Posted via: Dinamalar Android App )
16-ஆக-201905:10:07 IST Report Abuse
Babu குல்லா போட்டு குண்டு வைப்பவர்களை போலவே, கையில் "பச்சை" என்று பச்சை குத்திக் கொண்டு குண்டு வைத்த சிவப்பர்களையும் பத்திரமாக சேர்க்கும் விமானிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
15-ஆக-201923:43:00 IST Report Abuse
D.Ambujavalli நானும் 80 - 90 களில் அமேரிக்கா செல்லும்போது விமானம் தரை இறங்கியதும் பயணிகள் கைதட்டி பாராட்டியதைக் கண்டிருக்கிறேன். இப்போதெல்லாம் எனோ அது நிறுத்தப்பட்டுவிட்டது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X