233 பேரின் உயிரை காத்த விமானிக்கு குவியும் பாராட்டு| "Hero" Pilot Lands Plane In Corn Field, Praised For Saving 233 Lives | Dinamalar

233 பேரின் உயிரை காத்த விமானிக்கு குவியும் பாராட்டு

Updated : ஆக 15, 2019 | Added : ஆக 15, 2019 | கருத்துகள் (14)
Share
ரஷ்யா, விமானம், விமானி

மாஸ்கோ: ரஷ்யா தலைகர் மாஸ்கோவில் இருந்து, 233 பேருடன் கிளம்பிய விமானம் மீது பறவை மோதியது. இதனால்,விமான என்ஜீன் செயலிழந்ததால், சோளம் விதைத்த நிலத்தில் விமானத்தை பத்திரமாக தரையிறக்கி, பயணிகளின் உயிரை காத்த விமானிக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து கிரிமியாவில் உள்ள சிம்பெரோபோல் என்ற நகருக்கு 233 பயணிகளுடன் யுரல் விமான நிறுவனத்திற்கு சொந்தமான ஏர்பஸ் 321 விமானம் கிளம்பியது. சிறிது நேரத்தில் விமானம் மீது பறவை மோதியது. இதனால், விமானத்தை உடனடியாக, மாஸ்கோ புறநகரில் உள்ள சோளம் பயிரிடப்பட்ட நிலத்தில் விமானி தரையிறக்கினார். உடனடியாக விமானத்தின் என்ஜீன்கள் தானாக அணைந்தன. இதில், 23 பேர் காயமடைந்துள்ளனர். ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமானத்தை பத்திரமாக தரையிறக்கி, 233 பேரின் உயிரை காப்பாற்றிய விமானி டாமிர் யுசுபோவிற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அவரை, அந்நாட்டு மீடியாக்கள் 'ஹீரோ' எனவும், இன்ஜீன் செயலிழந்த நிலையில், தரையிறக்கும் கியர் இல்லாமல், விமானத்தை பத்திரமாக தரையிறக்கி, 233 பேரின் உயிரை காப்பாற்றிவிட்டார் என புகழ்ந்துள்ளன.


latest tamil news
பயணி ஒருவர் கூறுகையில், விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில், விமானத்தில் இருந்த விளக்குகள் அணைந்து அணைந்து எரிய துவங்கின. கருகும் வாசனை வந்தது. விமானம் தரையிறங்கிய உடன் அனைவரும் ஓடிவந்துவிட்டனர் என்றார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X