பொது செய்தி

இந்தியா

சுதந்திர தினம்: வெளிநாடுகளில் சிறப்பான கொண்டாட்டம்

Updated : ஆக 15, 2019 | Added : ஆக 15, 2019 | கருத்துகள் (2)
Advertisement
சுதந்திர தினம், வெளிநாடு, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, பாகிஸ்தான்,

புதுடில்லி: இந்தியாவின் 73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பாகிஸ்தான், பிரிட்டன், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்ளிட்ட இந்திய தூதரகங்களில் தேசிய கொடி ஏற்றி வைக்கப்பட்டது.

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இந்திய தூதரை பாகிஸ்தான் வெளியேற்றியது. இந்நிலையில், இந்தியாவின் 73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தில், சிறப்பாகவும், உற்சாகமாகவும் நடந்த நிகழ்ச்சியில், தூதரக அதிகாரி கவுரவ் அலுவாலியா தேசிய கொடியை ஏற்றி வைத்து, ஜனாதிபதியின் உரையை வாசித்தார். இந்த நிகழ்ச்சியில் தூதரக அதிகாரிகள் பங்கேற்றனர்.






பிரிட்டன் தலைநகர் லண்டனில் நடந்த நிகழ்ச்சியில், அந்நாட்டிற்கான இந்திய தூதர் ருச்சி ஞானஷியாம், இந்தியாவின் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்த நிகழ்ச்சியில், இந்திய தூதர் விஜய் எம். குவாத்ரா தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.




Advertisement





ஆஸ்திரேலியாவின் கான்பரா நகரில் உள்ள இந்திய தூதரக அலுவலகத்தில் நடந்த சுதந்திர தின விழாவில், இந்திய தூதர் கான்ட்னே தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.








சிங்கப்பூர், சவுதி அரேபியா உள்ளிட்ட பல வெளிநாடுகளிலும், இந்திய தூதரக அலுவலகங்களில், தூதர்கள் தேசிய கொடி ஏற்றி, சுதந்திர தினத்தை உற்சாகமாக கொண்டாடினர்.









Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
16-ஆக-201906:31:27 IST Report Abuse
Natarajan Ramanathan எல்லா நாட்டிலும் நமது சுதந்திர தினத்தை கொண்டாடுவார்கள். ஆனால் கேவலமான தீயமுக கட்சி அலுவலகத்தில் மட்டும் இன்றுவரை தீயசக்தியோ, சுடலையோ தேசியகொடி ஏற்றியதே இல்லை. இந்த லட்சணத்தில் கோட்டையில் கொடியேற்ற ஆசைப்பட்டால் மட்டும் நடக்குமா?
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
15-ஆக-201920:20:25 IST Report Abuse
Natarajan Ramanathan இன்று அபுதாபி விமான நிலையத்தில் வந்து இறங்கிய இந்தியர்கள் அனைவருக்கும் மாலை அணிவித்து நமது தேசியக்கொடியை வழங்கினார்கள். குழந்தைகளுக்கு காவி நிற பலூனும் கொடுத்தார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X