பொது செய்தி

தமிழ்நாடு

கயிறும், திலகமும் ஜாதி அடையாளமா? இந்து அமைப்புகள் எதிர்ப்பால் உத்தரவு வாபஸ்

Updated : ஆக 15, 2019 | Added : ஆக 15, 2019 | கருத்துகள் (46)
Share
Advertisement

சென்னை: தமிழக பள்ளிகளில் மாணவர்கள் கையில் வண்ண கயிறு, நெற்றியில் திலகம் அணிந்து வருவதை ஜாதி அடையாளமாக சுட்டிக்காட்டி, நடவடிக்கை எடுக்குமாறு, தமிழக பள்ளி கல்வித்துறை பிறப்பித்த உத்தரவுக்கு, இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, உத்தரவை கல்வித்துறை வாபஸ் பெற்றது.latest tamil news
சுற்றறிக்கை:


தமிழக பள்ளி கல்வித்துறை இயக்குனர் அலுவலகம், சமீபத்தில் அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி இருந்தது. அதில், 'பயிற்சி ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தமிழக பள்ளிகளை பார்வையிட்டபோது, ஒரு சில பள்ளிகளில் விளையாட்டு அணி தேர்வு செய்யும் போதும், மதிய உணவு இடைவேளை மற்றும் வகுப்பு நேரங்களிலும், குறிப்பிட்ட பிரிவு மாணவர்கள், அடையாளம் கண்டு ஒன்று கூடிக்கொள்ளும் வகையில், தங்களது கையில் சிவப்பு, மஞ்சள், பச்சை மற்றும் காவி நிற கயிறு கட்டியிருந்துள்ளனர்.


latest tamil news
இந்து அமைப்புகள் எதிர்ப்பு:


மோதிரம் அணிந்தும், நெற்றியில் திலகமிட்டும், தாழ்ந்த ஜாதி, உயர் ஜாதி என, தங்களின் ஜாதி அடையாளத்தை காட்டியுள்ளனர். இதனால் மாணவர்கள் மத்தியில் மோதல் ஏற்படுகிறது. ஜாதி பாகுபாடுகளை ஏற்படுத்தும் இதுபோன்ற வழக்கங்களுக்கு அனுமதி அளிக்கக்கூடாது; கண்காணித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இச்சுற்றறிக்கையின் மீது நடவடிக்கை எடுத்ததற்கான அறிக்கையை, இணை இயக்குனர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும்' என கூறப்பட்டது. இதற்கு இந்து அமைப்புகள் தங்கள் எதிர்ப்புகளை கடுமையாக பதிவு செய்தன.


வாபஸ்:


இந்நிலையில் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ஏற்கனவே என்ன நிலை இருந்ததோ, அந்த நிலையே தொடரும் என தெரிவித்துள்ளார். சென்னை, காமராஜர் சாலையில் உள்ள சாரண, சாரணியர் இயக்க தலைமை அலுவலகத்தில், தேசிய கொடியேற்றிய பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:


latest tamil newsஜாதி மற்றும் மதத்தை வெளிப்படுத்தும் வகையில் மாணவர்கள் செயல்படுவதாகவும், அதனை சரிபார்க்க வேண்டும் என ஆதி திராவிடர் நலத்துறை சார்பில், பள்ளி கல்வித்துறை இயக்குனருக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அந்த சுற்றறிக்கை அப்படியே, மாவட்ட கல்வி இயக்குனர்களுக்கு அனுப்பப்பட்டுவிட்டது. இது அரசின் கவனத்திற்கு வரவில்லை. எது நடைமுறையில் இருக்கிறதோ அந்த நடைமுறைகள் பின்பற்ற வேண்டும் என்பது அரசின் கொள்கை. அதனை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். பழைய நடைமுறையே தொடரும் வண்ணக்கயிறு கட்டுவது தொடர்பான அரசின் சுற்றறிக்கை தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இதனால், மாணவர்கள் தங்கள் கைகளில் கயிறு அணியலாம். இது ஜாதி அடையாளமாக கருதப்படாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
16-ஆக-201913:39:09 IST Report Abuse
J.Isaac சம்பத்தப்பட்ட துறை அமைச்சருக்கு தெரியாமல் கல்வி துறை செயலர் எப்படி பிரச்சினைக்குரிய சுற்றறிக்கை அனுப்ப முடியும். அப்படி தகவல கொடுக்காமல் அனுப்பியிருந்தால் செயலரர் மீது நடவடிக்கை எடுத்திருப்பார்களே. எல்லாம் ஒரு நாடகம். எப்படியாவது நல்லினக்கத்தோடு வாழ்கின்ற தமிழ் மக்கள் மத்தியில் குழப்பத்தை உண்பாக்கி அரசியல் ஆதாயம் அடைய ஒரு கூட்டம் அலைகிறது.
Rate this:
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
16-ஆக-201914:18:36 IST Report Abuse
Chowkidar NandaIndiaகோவில்கள் எல்லாம் சாத்தானின் இருப்பிடங்கள் என்று சொல்லிக்கொண்டு மதமாற்றி கும்பல்கள் இரவு பகல் பாராமல் அலைந்து கொண்டிருக்கிறதே. அந்த சாத்தான்களுக்கு ஆதரவளிக்கவும் இங்கே சோடைபோனவர்கள் உள்ளனரே....
Rate this:
Cancel
16-ஆக-201913:26:38 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் சிலர் இங்கே ஜாதியை திணிக்கிறார்கள் , வேற்றுமையை உருவாக்குகிறார்கள் என்கிறார்கள். ஏற்கெனவே பல ஆயிரம் ஆண்டுகளாக சாதிகள் உள்ளது , அதை இப்போது யார் வந்து திணிக்க முடியும் , சாதி என்றாலே தவறான வார்த்தை , அடையாளம் என்று உங்களுக்கு யார் சொன்னது , மக்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்தபோது அந்த கூட்டத்திற்கு அடையாளமாக வைக்கப்பட்டதுதான் சத்தி பெயர்கள் , ஜாதி என்கிற வடமொழி சொல்லுக்கு சமூகம் என்று தான் பொருள். ஒரு சாதியின் பெயரை வைத்தே அவர் நாட்டின் இந்த பகுதிகளில் வசிப்பவர்கள் , அவர்கள் பேசும் மொழி இது , உணவு பழக்க வழக்கம் , அவர்களின் கடவுள் வழிபாடு , கலாச்சாரம் அனைத்தையும் சொல்லலாம். தற்போது இருக்கும் பிரச்சினை பொருளாதார ஏற்ற தாழ்வுகள் தான் , 73 வருடங்கள் வேலை , கல்வியில் இடஒதுக்கீடு கொடுத்தும் அந்த சமூகம் முன்னேறவில்லை என்றால் அந்த திட்டம் சரியாக அமல்படுத்தப்பட வில்லை என்றுதான் அர்த்தம் , அதை சரிசெய்ய உண்மையான சமூக ஆர்வலர்கள் குரல் கொடுக்கவேண்டும் , அதை விடுத்து திராவிட கும்பல் சொல்லும் சாதி ஒழிப்பு என்று சொல்லி மக்களை முட்டாளாக்க கூடாது. இத்தனை ஆண்டுகள் இவர்கள் நாட்டை ஆண்டு எத்தனை சாதிகளை ஒழித்திருக்கிறார்கள் , புதிய சாதிகள் வேண்டுமானால் உருவாக்கி இருக்கிறது கிறித்துவ வன்னியர் , கிருத்துவ நாடார் , கிறித்துவ தலித் என்று. சாதி அடையாளங்கள் / பெயர்கள் கிறித்துவ , இஸ்லாம் மதங்களிலும் உள்ளது என்பதை மக்கள் உணர்ந்துகொள்ளவேண்டும்.
Rate this:
Cancel
16-ஆக-201913:04:35 IST Report Abuse
Tamilnadu CM சாதி மதங்களைக் குறிக்கும் வகையில் மாணவர்கள் தங்கள் கையில் கட்டப்படும் கயிறுகள் இனி பள்ளிகளில் அனுமதி இல்லை - தமிழக பள்ளி கல்வித்துறை நோட்டீஸ் சாதி கயிறு கட்டக்கூடாது என எப்படி சொல்லலாம், அதை உடனே அரசு வாபஸ் வாங்க வேண்டும், இல்லை போராட்டம் நடத்துவேன் - எச். ராஜா எனக்கு தெரியாமல் சர்குலர் வந்துடுச்சு, அது வாபஸ் வாங்கப்படுகிறது, பழைய நடைமுறையே பள்ளிகளில் பின்பற்றப்படும்..- கல்வி அமைச்சர் செங்கோட்டையன் இங்கே இரண்டு விஷயம் நீங்க நல்லா கவனிக்கணும்..முதல் விஷயம்., சாதி பற்றிய அடையாளங்களை விடக் கூடாது, சாதி மதம் எல்லாம் தனித்தனியா தெரியணும் என சொல்லும் பாஜக என்ற கட்சியையும், சொல்லும் எச் ராஜா என்ற ஆளையும் கவனிங்க.. இவர்களுக்கு சாதி ஒழிஞ்சு போயிட கூடாதுன்னு எவ்ளோ அக்கறை பாருங்க.., அவர்களின் குறிக்கோளும் அதுவே.. அடுத்த விஷயம்.., எந்த அரசு பதவியும் இல்லாத எச் ராஜா மிரட்டலுக்கெல்லாம் ஒரு மாநிலத்தின் அமைச்சர் செங்கோட்டையன் சரண்டர் ஆவதில் ஆளும் அடிமைகளின் முதுகெலும்பு வளைந்திருக்கும் அளவு சட்டுனு புரிஞ்சுக்கலாம்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X