'எங்கள் சுதந்திரம் பற்றி பேசுங்கள்'; இந்தியாவுக்கு பலுசிஸ்தான் கோரிக்கை

Updated : ஆக 15, 2019 | Added : ஆக 15, 2019 | கருத்துகள் (57)
Advertisement

குவெட்டா: 'பாகிஸ்தானிலிருந்து, பலுசிஸ்தான் பகுதி சுதந்திரம் பெறுவது பற்றி, சர்வதேச அளவில், இந்தியா குரல் எழுப் வேண்டும்' என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


பாகிஸ்தானில், இயற்கை வளமிக்க பகுதி, பலுசிஸ்தான். இப்பகுதி, பாகிஸ்தானுடன் இணைக்கப்ட்டதை, ஆரம்பத்திலிருந்தே அப்பகுதி மக்கள் எதிர்த்து வருகின்றனர். இங்கே, பாகிஸ்தான், தொடர்ந்து மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவதாக, அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். சமீபகாலமாக, சுதந்திர பலுசிஸ்தான் கோரிக்கை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவின், 73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, வாழ்த்து தெரிவித்த பலுசிஸ்தான் மக்கள், 'பாகிஸ்தானில் தாங்கள் படும் துன்பங்கள் பற்றியும், தங்கள் சுதந்திரம் பற்றியும், இந்தியா, சர்வதேச அளவில், குரல் எழுப்ப வேண்டும்' என, கோரிக்கை விடுத்துள்ளனர்.

பலுசிஸ்தானை சேர்ந்த அட்டா பலோக் கூறுகையில், '' சுதந்திரம் அடைந்து, 72 ஆண்டுகள் நிறைவில், இந்தியா மாபெரும் வளர்ச்சி பெற்றள்ளது. இன்று, உலகம் முழுவதும், இந்தியா பெரிதும் மதிக்கப்படுகிறது. எங்களுக்கு, இந்தியா எப்போதும் ஆதரவு அளித்து வருகிறது. பாகிஸ்தானில் நாங்கள் படும் துன்பத்தையும், எங்களின் சுதந்திரம் பற்றியும், சர்வதேச அளவில் இந்தியா குரல் எழுப்ப வேண்டும். ஜெய்ஹிந்த்,'' என்றார்.

பலுசிஸ்தானை சேர்ந்த அஷ்ரப் ஷெர்ஜான் கூறுகையில், 'எங்கள் பிரச்னையை, ஐ.நா., உட்பட சர்வதேச அரங்குகளில், இந்தியா கொண்டு செல்ல வேண்டும்; பாகிஸ்தான் கையில் சிக்கி, பலுசிஸ்தான் சீரழிகிறது,'' என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (57)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
B.s. Pillai - MUMBAI,இந்தியா
17-ஆக-201904:22:31 IST Report Abuse
B.s. Pillai P.M.Modi can do it. Indira Gandhi did it and freed the people of Bangla Desh from suppression by Pakistan. It is History. Mr.Modi is capable of doing this separation of Baluchistan from Pakistan. Indiahad helped Bangla Desh people and saved them from oppression .Similarly he can do this saving the people of Baluchistan from oppression of Pakistan. India was magnanimous in releasing one lakh Pakistan Army which surrendered to Indian Army forces.That proved to the world that India was never a country to forcibly occupy and curtail the freedom of the people of another country. Action taken in Kashmir is also with the same principle that we never allow to lose our territory .
Rate this:
Share this comment
Cancel
spr - chennai,இந்தியா
16-ஆக-201919:28:58 IST Report Abuse
spr இவங்க திரு மோடியை அணுகுவதனை விட நம்ம ஸ்டாலினை அணுகலாம் அவர்தான் 2012 ல் "டெசோ மாநாட்டு தீர்மானங்களை நானும் டி.ஆர்.பாலுவும் நியூயார்க் ஐ.நா.மன்றத்தில் 1-ம் தேதி கொடுக்கிறோம். 3-ம் தேதி ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைக் கழகத்திடமும் இதேபோல் மனு கொடுக்கிறோம்" என்று சென்றவர் திரு மோடிக்கு இதுக்கெல்லாம் நேரமில்லை இந்தியாவின் பிரச்சினையைத் தீர்க்கவே நேரம் போதாது அந்த முட்டாப்பய புள்ளை ராகுல் ஏதாவது ஏடாகூடமா செய்யறதுக்கு முன்னாடி உருப்படியா வேலை பாக்கணும் முதல்லே தமிழ் நாட்டிலே நீர் தட்டுப்பாடில்லாம செய்யணும் காஷ்மீர் விவகாரத்தை விட பெரிய வேலை
Rate this:
Share this comment
Cancel
Suppan - Mumbai,இந்தியா
16-ஆக-201913:40:55 IST Report Abuse
Suppan 2022 க்குள் பாகிஸ்தான் சிதறுவது உறுதி. இது பலருடைய கணிப்பும் கூட அப்பொழுது நம்மூர் சுடாலின் வகையறா என்ன செய்வார்கள்?
Rate this:
Share this comment
jagan - Chennai,இந்தியா
16-ஆக-201917:19:55 IST Report Abuse
jaganஅப்பிடி உடைந்தால், 20 அல்லது 30 லட்சம் அகதிகள் நம் நாட்டுக்குள் புகுவார்கள்...பரவாயில்லையா ?...
Rate this:
Share this comment
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
18-ஆக-201912:13:34 IST Report Abuse
தமிழ்வேள்அப்படி வருபவர்கள் இந்துக்களாக மாறவேண்டும்...
Rate this:
Share this comment
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
19-ஆக-201905:40:16 IST Report Abuse
 nicolethomsonஐயோ ஜெகன் அவர்களே இதுக்கு அணுகுண்டு பரவா இல்லை...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X