பொது செய்தி

இந்தியா

'காஷ்மீரில் எந்த மாற்றமும் இல்லை!' தேசிய கொடியேற்றி கவர்னர் உரை

Updated : ஆக 17, 2019 | Added : ஆக 15, 2019 | கருத்துகள் (10)
Share
Advertisement

ஸ்ரீநகர்: ''ஜம்மு - காஷ்மீரில் வளர்ச்சியும், முன்னேற்றமும் பெற இடையூறாக இருந்ததால் தான், சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. அதனால், இந்த மாநிலத்தின் அடையாளம் மாறிப் போகவும் இல்லை; மறைந்து போகவும் இல்லை,'' என, ஜம்மு - காஷ்மீர் கவர்னர், சத்யபால் மாலிக் கூறினார்.latest tamil newsநாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில், நேற்று பலத்த பாதுகாப்புக்கு இடையே, கொண்டாட்டங்கள் நடந்தன. மாநில கட்சிகளின் தலைவர்கள், வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளதால், விழா மேடையில் அவர்களை காண முடியவில்லை. பா.ஜ., தலைவர்கள் பலர் வந்திருந்தனர்.நீண்ட காலத்திற்கு பின், 'வந்தே மாதரம்; பாரத் மாதா கீ ஜெய்' போன்ற கோஷங்களை பலர் எழுப்பினர். தேசிய பாதுகாப்பு ஆலோசகர், அஜித் தோவல், இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

துணை ராணுவப் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று, மூவர்ண கொடியை ஏற்றி வைத்து, கவர்னர், சத்யபால் மாலிக் பேசியதாவது: ஜம்மு - காஷ்மீரில், மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள், வரலாற்றுச் சிறப்பு மிக்கவை. இதன் மூலம், வளர்ச்சிக்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. சுதந்திரம் அடைந்து, 70 ஆண்டுகளுக்கும் மேலாக, பொருளாதார வளர்ச்சி, அமைதி, முன்னேற்றத்தை கண்டறியாமல் இருக்கும், இந்த பகுதி மக்களுக்கு, இனி அனைத்தும் கிடைக்கும்.

ஜம்மு - காஷ்மீரில் வளர்ச்சியும், முன்னேற்றத்தையும் பெற இடையூறாக இருந்தததால் தான், சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. அதனால், இந்த மாநிலத்தின் அடையாளம் மாறிப் போகவும் இல்லை; மறைந்து போகவும் இல்லை. உள்ளூர் மொழிகள், இனி மேம்பாடு அடையும். இங்கிருந்து விரட்டி அடிக்கப்பட்ட, காஷ்மீர் பண்டிட்டுகள், மீண்டும் இங்கு திரும்ப, அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்; இதற்கு, அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.


லடாக்கில் தோனி:


latest tamil news


புதிதாக உருவாக்கப்பட்டுள்ள லடாக் யூனியன் பிரதேசத்தில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், மகேந்திர சிங் தோனி, 38, சுதந்திர தினத்தை, நேற்று ராணுவ வீரர்களுடன் கொண்டாடினார். இதற்காக, நேற்று முன்தினம் லடாக் சென்ற அவர், ராணுவ வீரர்களின் முழு சீருடையில் இருந்தார். அவரை, ராணுவ உயரதிகாரிகள் வரவேற்று, முகாம்களுக்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்த வீரர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களுடன், தோனி உரையாடினார். பின், ராணுவ மருத்துவமனைக்கு சென்று, அங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ஆறுதல் கூறினார். நேற்று அவர், சுதந்திர தின கொண்டாட்டங்களில் பங்கேற்றார்.


நாம்க்யால் நடனம்:


latest tamil news


லடாக் தொகுதி, பா.ஜ.,- எம்.பி.,யான, ஜாம்யாங் ஸெரிங் நாம்க்யால், சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது, லடாக்கின் பாரம்பரிய உடை அணிந்து, கையில் மூவர்ண கொடியுடன் நடனமாடினார். இதன், 'வீடியோ' வேகமாக பரவி பாராட்டுகளை குவித்து வருகிறது. ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் மசோதா குறித்த விவாதத்தின் போது, இவர், லோக்சபாவில் ஆவேசமாக பேசிய உரையும், இதே போல, சமூக வலை தளங்களில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த உரையை, அப்போது, பிரதமர் மோடியும் வெகுவாக பாராட்டினார்.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh M - COIMBATORE,இந்தியா
16-ஆக-201910:33:45 IST Report Abuse
Ramesh M Mr Rafi , பிரிட்டிஷ்காரன் எவ்வாறு இந்தியா வை கைப்பற்றி பிறகு நம் போராடி சுதந்திரம் பெற்றோமோ அதே போல முஸ்லீம் படையெடுப்பில் நாம் அடிமையானோம். உங்கள் பதிவின் மூலம் எனக்கு இத்தகைய எண்ணம் எல்லாம் உண்டாகிறது. உங்களை போன்றவர்கள் மதம் சார்ந்து தான் அனைத்தையும் பார்க்கிறீர்கள். மற்றவர்களிடம் மதச்சார்பின்மை எதிர்பார்க்கும் நீங்கள் முதலில் மதச்சார்பின்மையோடு பேசுங்கள் செயல் படுங்கள். மதச்சார்பின்மை பேசும் ஸ்டாலின் சிர்ஸிஹ்மஸ் வாழ்த்து ரம்ஜான் வாழ்த்து சொல்லும் அவர் தீபாவளி வாழ்த்து விநாயகர் சதுர்த்தி வாழ்த்து என இந்துக்கள் பண்டிகைக்கு வாழ்த்து சொல்வதில். இது தான் நீங்களும் செயல் படுகிறீர்கள். எல்லோரும் நம் நாடு நம் மக்கள் என உணருங்கள். உங்கள் மக்கள் மட்டும் கண்ணுக்கு தெரியும் மற்ற மக்கள் கண்களுக்கு தெரிவதில்லை.
Rate this:
Cancel
Ramesh M - COIMBATORE,இந்தியா
16-ஆக-201910:25:49 IST Report Abuse
Ramesh M பிரிட்டிஷ் சுதந்திரம் கொடுத்தான் என்பது. அவன் நம் சுதந்திரத்தை பறித்தான் என யாரும் நினைப்பதில்லை. பிரிட்டிஷ்காரன் யார் நமக்கு சுதந்திரம் கொடுக்க ?
Rate this:
Cancel
Ramesh M - COIMBATORE,இந்தியா
16-ஆக-201910:23:20 IST Report Abuse
Ramesh M MrRAFIரபி. மதச்சார்பின்மையை பற்றி மற்றவர்களிடம் எதிர்பார்க்கும் உங்களிடம் அது இல்லை. நீங்கள் மத ரீதியாக தான் அனைத்தையும் பார்க்கிறீர்கள். உங்களைப்போன்ற என்னோத்தில் சுயநலமாக சிந்தித்து தான் SHEK அப்துல்லா நடந்துகொண்ண்டார். அங்குள்ள ஆயிரக்கணக்கான பண்டிட்டுக்கள் கொல்லப்பட்ட கரணம் என்ன. 3 லக்சம் பண்டிட்டுக்கள் அவர்கள் சொந்த மண்ணில் இருந்து வெளியேறிய கரணம் என்ன. எங்களுக்கு விவரம் தெரியாமல் மதச்சார்பின்மை ஜனநாயகம் என்று நீங்கள் கடைபிடிக்காத விஷயத்தை மற்றவர்கள் கடைபிடிக்க சொல்லி உங்களுக்கு தேவையானதை செய்துகொள்ளாதீர்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X