பொது செய்தி

இந்தியா

முப்படைகளுக்கும் தலைமை தளபதி யார்? பிபின் ராவத்துக்கு வாய்ப்பு

Updated : ஆக 17, 2019 | Added : ஆக 15, 2019 | கருத்துகள் (11+ 49)
Advertisement
முப்படை,தலைமை தளபதி,யார்?,பிபின் ராவத்,வாய்ப்பு

புதுடில்லி: 'முப்படைகளையும் ஒருங்கிணைக்கும் வகையில், தலைமை தளபதி என்ற, புதிய பதவி உருவாக்கப்படும்' என, சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். அதன்படி, இந்த புதிய பதவிக்கு யார் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. தற்போதைய நிலையில், ராணுவ தளபதி, பிபின் ராவத், தலைமை தளபதியாக நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.

ராணுவம், விமானப் படை மற்றும் கடற்படை என, முப்படைகள், நாட்டின் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளன. இவற்றைத் தவிர, பல்வேறு துணை ராணுவப் படைகளும் உள்ளன. இந்நிலையில், 1999ல், கார்கிலில் நடந்த போரைத் தொடர்ந்து, அமைக்கப்பட்ட நரேஷ் சந்திரா தலைமையிலான ஆய்வுக் குழு, 'முப்படைகளின் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் வகையில், தலைமை தளபதி பதவியை உருவாக்க வேண்டும்' என, பரிந்துரை செய்தது. ராணுவ நிபுணர்களும், முன்னாள் தளபதிகளும் இந்தக் கருத்தை வலியுறுத்தினர்.


வரவேற்பு:

இதற்கிடையில், மூன்று படைகளின் தளபதிகள் குழு உருவாக்கப்பட்டு, மூவரில், 'சீனியர்', அதன் தலைவராக நியமிக்கப்படும் முறை கொண்டு வரப்பட்டது. தற்போதைக்கு, விமானப் படையின் தளபதி, பி.எஸ். தனோவா, இந்தக் குழுவின் தலைவராக உள்ளார். முப்படைகளுக்கான தலைமை தளபதி பற்றி, 19 ஆண்டுகளாக பேசப்பட்டு வந்த நிலையில், இந்தப் பதவி விரைவில் உருவாக்கப்படும் என, பிரதமர் மோடி, சுதந்திர தின உரையில் நேற்று அறிவித்தார். இதற்கு, முன்னாள் தளபதிகள், பாதுகாப்பு துறை நிபுணர்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில், புதிய தலைமை தளபதியாக, யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. புதிய பதவி குறித்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்னதாக, கடந்தாண்டே, இதற்கான முயற்சிகள் துவங்கியுள்ள தகவல் தெரிய வந்துள்ளது.


பரிந்துரை:

முப்படைகளை ஒருங்கிணக்கும் தலைமை தளபதி பதவியை உருவாக்குவது தொடர்பாக, 'செயல்படுத்தும் குழு' ஒன்றை கடந்த ஆண்டு பிரதமர் மோடி அமைத்தார். ராணுவ அமைச்சகத்தின் செயலர், ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படை தலைவர், முப்படை தளபதிகள் குழுவின் தலைவர் உள்ளிட்டோர் இந்தக் குழுவில் இடம்பெற்றனர். புதிய தலைமை தளபதியின் அதிகாரம், இந்தப் பதவியின் சாதக, பாதகங்கள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஏற்கனவே விவாதிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு நியமித்த, செயல்படுத்தும் குழு, ஏற்கனவே பல கட்டங்களாக ஆய்வு செய்து, புதிய தலைமை தளபதியாக யாரை நியமிக்கலாம் என்பது குறித்த பரிந்துரையை அளித்துள்ளதாக தெரிகிறது. தற்போது, ராணுவத்தின், 'சீனியரான', ராணுவத் தளபதி, பிபின் ராவத், இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. வரும், டிசம்பரில் அவர் ஓய்வு பெற உள்ளார். இந்நிலையில், புதிய தலைமை தளபதியின் பதவிக் காலம் உள்ளிட்ட விபரங்கள் குறித்து, இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என, தெரிகிறது.


அவசியம் என்ன?

முப்படைகளை ஒருங்கிணைக்கும் தலைமை தளபதி பதவிக்கு தற்போது அவசியம் என்ன என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இது குறித்து, பாதுகாப்பு துறை நிபுணர்கள் கூறியதாவது: மத்திய அரசின் முடிவு, மிகவும் பாராட்டக் கூடிய, தற்போதைய நிலையில் தேவையான ஒன்று. முப்படைகளை நவீனப்படுத்துவது, இணைந்து செயல்படுவது, ஒருங்கிணைப்பது போன்றவை தலைமை தளபதியின் கீழ் வரும். பிரதமர், ராணுவ அமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருடன் நேரடியாக ஆலோசித்து, தேவையானவற்றை விரைந்து பெறுவதற்கு, இது உதவும்.

தற்போது, ராணுவத்தில் உள்ள, 15 லட்சம் வீரர்களை, சரியான அளவுக்கு மாற்றி அமைக்க வேண்டும். அதேபோல், 9,000க்கும் மேற்பட்ட அதிகாரிகளின் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பிரச்னையில், இனி, துரிதமாக முடிவு எடுக்க முடியும். தற்போது, முப்படைகளின் தளபதிகள், தனித்தனியாக தங்களுடைய பிரச்னைகள் குறித்து, அரசுடன் விவாதித்து வருகின்றனர். தலைமை தளபதியின் கீழ், முப்படைகளும் அடங்கிய, 'தியேட்டர் கமாண்ட்' எனப்படும், ஒருங்கிணைந்த பிரிவு உருவாக்கப்படும். இதன் மூலம், பிரச்னைகளின் போது, அந்தந்த தியேட்டர் கமாண்ட், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள முப்படைகளையும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

தற்போது, அமெரிக்கா, சீனாவில் இதுபோன்ற நடைமுறையே உள்ளது. சீனாவில், சமீபத்தில், ஏழாக இருந்த தியேட்டர் கமாண்ட்கள், மண்டலம் வாரியாக, ஐந்தாக குறைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், உத்தரவுகள் உடனடியாக சென்று சேரும். ஆனால், நமது நாட்டில், மொத்தம், 17 கமாண்ட்கள் உள்ளன. ராணுவத்தில், ஆறு; கடற்படையில், மூன்று; விமானப் படையில், ஐந்து கமாண்ட்கள் உள்ளன. இதைத் தவிர, சிம்லாவில் ராணுவ பயிற்சி கமாண்ட்; கடற்படையில், பெங்களூரில் பயிற்சி கமாண்ட் மற்றும் நாக்பூரில் பராமரிப்பு கமாண்ட்கள் உள்ளன. அந்தமான் - நிகோபரில் முப்படையின் கூட்டு கமாண்ட் உள்ளது. இந்த கமாண்ட்கள் எண்ணிக்கை குறைக்கப்படுவதுடன், ஒருங்கிணைக்கப்படுவதால், உடனடி உத்தரவுகள் பிறப்பிக்க முடியும்.

அதே நேரத்தில், இதில் சில பிரச்னைகளும் உள்ளன. தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் அல்லது ராணுவ செயலருடன், தலைமை தளபதி எந்தெந்த பிரச்னைகள் குறித்து பேச வேண்டும் என்பது குறித்து தீர்க்கமான வரையறை வகுக்க வேண்டும். தற்போது, ராணுவத்தைவிட, விமானப்படை மற்றும் கடற்படையின் பலம் குறைவு என்பதால், ஒருங்கிணைந்த கமாண்ட்களில், தங்களைவிட ராணுவத்துக்கே அதிக முக்கியத்துவம் கிடைக்கும் என்ற பேதமும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. துவக்கத்திலேயே இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement
வாசகர் கருத்து (11+ 49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
spr - chennai,இந்தியா
16-ஆக-201919:41:11 IST Report Abuse
spr "புதிய தலைமை தளபதியின் அதிகாரம், இந்தப் பதவியின் சாதக, பாதகங்கள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஏற்கனவே விவாதிக்கப்பட்டுள்ளது." இதுதான் மோடியின் திறமை "எந்த முடிவும் எடுக்காமல் காங்கிரஸ் தலைமை இதை தாமதப்படுத்தியதே அன்றி காங்கிரஸ் ஒன்றும் இது தேவையில்லாதது என்று எப்போதும் கூறவில்லை " இதுதான் காங்கிரஸ். ஆனால் இப்பொழுது சொல்லும். திரு மோடி செய்த அனைத்துச் செயல்களும் (ஜலசக்தி அமைச்சகம் போன்ற ஒரு சில செயல்கள் தவிர) .காங்கிரசால் துவங்கப்பட்டு சுய ஆதாயம் பெற வாய்ப்பில்லாமல் போனதால் துணிந்து செய்யப்படவில்லை என்ற நிலையில், மோடி அரசு முன்னெடுத்து இப்பொழுது செய்து வருகிறது இதனால் பாஜகவின் மனமோகன் சிங்கான ராஜ்நாத் சிங்கிற்கு கொஞ்சம் ஒய்வு கிடைக்கும் (அதாவது அவருக்கு அதிரடியாகச் செயல்படும் ராணுவ செயல்பாடு தெரிந்த ஒரு அதிகாரியின் ஆதரவு கிடைக்கும்) இது இன்றைய கால கட்டத்தில் எல்லையோர பாதுகாப்புத் தேவைகளால் அவசியமாகிறது மேலும் ராணுவ விமான கப்பற்படையின் கொள்முதல் ஒரே அதிகாரத்தின் கீழ் வருவதால் ஊழல் குறையலாம் போட்டி கொள்முதல் அதனால் பல்வேறு நாடுகளிருந்து வாங்குவது இவை கட்டுக்குள் வரும் நல்ல முடிவே இந்த நாடு இதுவரை பல சவால்களைத் திறமையாக சமாளித்து வருகிறது எனவே ராணுவ ஆட்சி வருமோ என்ற சவாலையும் தக்க முறையில் சந்திக்கும்
Rate this:
Share this comment
Cancel
K.n. Dhasarathan - chennai,இந்தியா
16-ஆக-201917:44:13 IST Report Abuse
K.n. Dhasarathan எவ்வளவோ முக்கிய பிரச்சனைகள் கிடப்பில் கிடக்கு, இப்போ தலைமை தளபதி தேவையா ? ஏன் இவர்களுக்கு வேறு வேலை ஏதும் இல்லையா ?
Rate this:
Share this comment
Bebeto - Michigan,யூ.எஸ்.ஏ
16-ஆக-201921:44:00 IST Report Abuse
Bebetoஎன்னது? என்ன அவசரமா? உமக்கு துளி கூட, நாட்டு நடப்பு தெரியாது போலும்.. கார்கில் போரில் நாம் அடைந்த பின்னடைவுக்கு காரணம் ஒரே தளபதி இல்லாமல், மூன்று பேர் இருந்ததால், வேண்டிய உதவி கிடைக்காமல் போனது. தரை படை கார்கில் பகுதியில் முன்னேற, விமானப்படை அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். ஆனால் விமான படை தளபதி ஒத்துழைக்க வில்லை. பிறகு பிரதமர் தலையீட்டில் உதவி வந்தது இதனால், இந்திய ராணுவத்துக்கு பயங்கர பின்னடைவு ஏற்பட்டது. ஆகையால், மூன்று படைகள் மற்றும் உளவுத்துறை போன்ற முக்கியமான துறைகள் எல்லாவற்றிக்கும்,, ஒரே தளபதிதான் தேவை....
Rate this:
Share this comment
ashak - jubail,சவுதி அரேபியா
20-ஆக-201906:36:55 IST Report Abuse
ashakகார்க்கில் போரே சவப்பெட்டியில் ஊழல் செய்யத்தான்னு சொல்றாங்க...
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
16-ஆக-201916:56:21 IST Report Abuse
Endrum Indian இது 1999 முதல் பேச்சில் , 2012 ல் செயல்பாட்டில் வர முயற்சி, இதன் சரியான ஆக்கம் இப்போது. கீழே அதன் விளக்கம் . "ராணுவத்தின் பலத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் முப்படைகளுக்கும் தலைவர் நியமிக்கப்பட உள்ளதாக பிரதமர் அறிவித்துள்ளார். பாதுகாப்புத்துறையில் மிக உயரிய அதிகாரியாக அவர் இருப்பார் என்றும் மோடி தெரிவித்தார். இந்தியாவில் Chief Of Defence Staff(CDS) என்ற புதிய பதவி ஒன்று உருவாக்கப்படவுள்ளது. இந்த பதவியை வகிப்பவர் தான் இந்தியாவின் ராணுவம், விமானம், கப்பல் ஆகிய முப்படைகளுக்கும் ஒரே தலைவராக இருப்பார். இது நமது நாட்டின் பாதுகாப்பு படைகளை மேலும் வலுவானதாக்கும் என தெரிவித்துள்ளார். தலைமை பாதுகாப்பு ஊழியர் (சி.டி.எஸ்.) என்றால் என்ன?, அதன் தலைவராக யார் இருப்பார்? மற்ற நாடுகளில் இந்த சி.டி.எஸ்.சின் பணி என்ன என்பது குறித்து பார்க்கலாம். சி.டி.எஸ். என்பது அரசாங்கத்தின் ஒற்றை புள்ளி இராணுவ ஆலோசகராக இருக்கும். மூன்று ராணுவ சேவைகளிடையே ஒருங்கிணைப்பு முக்கியமானது. மூன்று ராணுவ சேவைகளின் நீண்டகால திட்டமிடல், கொள்முதல், பயிற்சி மற்றும் தளவாடங்களை ஒருங்கிணைத்தல் ஆகிய பணிகள் இதனால் மேற்கொள்ளப்படும். குறுகிய, எதிர்கால போர்கள் விரைவான மற்றும் நெட்வொர்க் மையமாக மாறும் போது, மூன்று சேவைகளிடையே ஒருங்கிணைப்பு முக்கியமானது. கூட்டு திட்டமிடல் மற்றும் பயிற்சியின் மூலம் வளங்களை மேம்படுத்துவதே இதன் முக்கிய பணியாக அமையும். இந்தியா ஓர் அணு ஆயுத நாடாக இருப்பதால், சி.டி.எஸ். அணுசக்தி பிரச்சினைகள் குறித்து பிரதமரின் இராணுவ ஆலோசகராகவும் செயல்படும். சி.டி.எஸ். மூன்று சேவை தலைவர்களுக்கு மேலே இருப்பதால், கொள்முதலை மேம்படுத்துதல் மற்றும் செயல்முறையை நெறிப்படுத்துவதன் மூலமும் இந்த பணியை ஒருங்கிணைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சி.டி.எஸ். முன்மொழிவு இரண்டு தசாப்தங்களாக உள்ளது. உயர் இராணுவ சீர்திருத்தங்களை பரிந்துரைக்க 1999 ஆம் ஆண்டு கார்கில் யுத்தத்திற்கு பின்னர் நியமிக்கப்பட்ட கே. சுப்ரமண்யம் குழுவால் இது முதலில் செய்யப்பட்டது. இருப்பினும், சேவைகளிடையே ஒருமித்த தன்மை மற்றும் அச்சங்கள் இல்லாததால் இந்த அமைப்பு குறித்து முன்னேற்றம் எதுவும் இல்லை. சி.டி.எஸ். மீதான அச்சத்தை தீர்ப்பதற்கான ஒரு நடுவராக ஒரு நிரந்தர தலைமை தலைவரை (COSC) நியமிக்க நரேஷ் சந்திரா குழு 2012 இல் பரிந்துரை செய்தது. லெப்டினென்ட் ஜெனரல் டி.பி. ஷேகட்கர் அளித்த 99 பரிந்துரைகளில் சி.டி.எஸ். ஒன்றாகும். 2019 டிசம்பரில் முத்தரப்பு சேவைகள் தொடர்பான 34 பரிந்துரைகளை கொண்ட தனது அறிக்கையை சமர்ப்பித்தது ஷேகட்கர் (ஓய்வு) குழு. சி.டி.எஸ். இல்லாத நிலையில், தற்போது மூன்று தலைவர்களில் மூத்தவர் COSC இன் தலைவராக செயல்படுகிறார். ஆனால் இது ஒரு கூடுதல் பங்கு மற்றும் பதவிக்காலம் மிக குறைவு. உதாரணமாக ஏர் சீஃப் மார்ஷல் பி.எஸ். தனோவா கடற்படை தலைவர் சுனில் லன்பாவிடமிருந்து பெற்று மே 31 அன்று சிஓஎஸ்சியின் தலைவராக பொறுப்பேற்றார். எவ்வாறாயினும், ஏசிஎம் தனோவா செப்டம்பர் 30ம் தேதி ஓய்வு பெறவிருப்பதால் சில மாதங்கள் மட்டுமே இந்த பதவியில் இருப்பார். அவர் ஓய்வுக்கு பின்னர் இராணுவ தளபதி ஜெனரல் பிபின் ராவத்துக்கு மாற்றப்படும். ஜெனரல் ராவத்தும் மூன்று ஆண்டுகள் பதவியில் இருந்து டிசம்பர் 31 அன்று ஓய்வு பெற உள்ளார். அனைத்து முக்கிய நாடுகளிலும், குறிப்பாக அணு ஆயுத நாடுகளில், ஒரு சி.டி.எஸ். உள்ளது. இந்திய ஆயுதப்படைகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் மாதிரியாக வடிவமைக்கப்பட்ட யு.கே., பாதுகாப்பு செயலாளருக்கு சமமான ஒரு நிரந்தர செயலாளரை போன்றது சி.டி.எஸ். சி.டி.எஸ். என்பது பிரிட்டிஷ் ஆயுதப்படைகளின் தொழில்முறை தலைவராகவும், இராணுவ மூலோபாய தளபதியாக, செயல்பாடுகள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றன என்பதற்கு இங்கிலாந்து அரசாங்க வழிகாட்டுதல்கள் கூறுகின்றன. பாதுகாப்பு இராஜாங்க செயலாளர் மற்றும் பிரதமரின் மிக மூத்த இராணுவ ஆலோசகராகவும் உள்ளார். நிரந்தர செயலாளர் பாதுகாப்புக்கான அரசாங்கத்தின் முதன்மை சிவில் ஆலோசகராக உள்ளார். கொள்கை, நிதி மற்றும் திட்டமிடல் ஆகியவற்றிற்கான முதன்மை பொறுப்பை கொண்டுள்ளார். மேலும் துறைசார் கணக்கியல் அதிகாரியாகவும் உள்ளார். பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல்படி, இந்தியாவில் பாதுகாப்பு அமைச்சகம் இப்போது சி.டி.எஸ்.சை உருவாக்கும் பணியை தொடங்கும். இதற்கு சில மாதங்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என கூறப்படுகிறது."
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X