பொது செய்தி

தமிழ்நாடு

நீர்வளம் மிக்க மாநிலமாக தமிழகம்: பழனிசாமி உறுதி

Updated : ஆக 16, 2019 | Added : ஆக 16, 2019 | கருத்துகள் (9)
Share
Advertisement

சென்னை: ''தமிழகம் விரைவில், 'நீர்வளம் மிக்க மாநிலமாக' உருவாகும்,'' என, முதல்வர், பழனிசாமி தெரிவித்தார்.latest tamil newsசுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை, கோட்டை கொத்தளத்தில், முதல்வர், பழனிசாமி தேசிய கொடியேற்றினார். பின், அவர் பேசியதாவது: ஜெயலலிதா அறிமுகப்படுத்திய, மழை நீர் சேகரிப்பு திட்டத்தை, முழுவீச்சுடன் செயல்படுத்த, அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு, மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பயன்படுத்தப்பட்ட நீரை சுத்திகரித்து, மறு சுழற்சி செய்வதற்கு, அரசு கொள்கையை அறிவிக்க உள்ளது. அதன்படி, மக்கள் பயன்படுத்திய நீரை சுத்திகரிப்பு செய்து, தொழிற்சாலைகளுக்கும், பிற பயன்பாட்டிற்கும் வழங்க, அரசு நடவடிக்கை எடுக்கும்.


latest tamil newsபுதிய தொழிற்சாலைகள் அல்லது அடுக்குமாடிகள் கட்டுகிறபோது, பயன்படுத்தப்பட்ட நீரை, மறு சுழற்சி வழியே மீண்டும் பயன்படுத்த, சுத்திகரிப்பு நிலையம் உருவாக்கினால் தான், கட்டுமான அனுமதி வழங்கப்படும். இதனால், பெருமளவு நீர் சேமிக்கப்படும். கோதாவரி ஆற்றை, காவிரி ஆற்றுடன் இணைக்கும் திட்டத்தை, விரைவாக செயல்படுத்த, மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனால், பல மாவட்டங்களில், விவசாயம் மற்றும் குடிநீர் பிரச்னைக்கு, நல்ல தீர்வு ஏற்படும்.

கங்கை சீரமைப்பு திட்டம் போன்று, காவிரி ஆற்றை சீரமைக்க, 'நடந்தாய் வாழி காவிரி' என்ற, திட்டத்தை செயல்படுத்த, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேபோல், பவானி, வைகை, அமராவதி, தாமிரபரணி ஆறுகள் மாசுபடுவதை தடுக்க, அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காண, 'தமிழ்நாடு நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கம்' என்ற, தீவிர மக்கள் இயக்கம் துவக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவால், தமிழ்நாடு, மின் மிகை மாநிலமாக உருவாக்கப்பட்டது போல, இந்த இயக்கம் வழியே, தமிழ்நாடு, நீர்வளம் மிக்க மாநிலமாக, விரைவில் உருவாகும்.


latest tamil newsஇதற்கு மக்கள், தங்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும். 'மாநிலங்களுக்கு இடையிலான, நதிநீர் பிரச்னை தீர்ப்பாயம்' நடைமுறைக்கு வந்தாலும், ஏற்கனவே, உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி அமைக்கப்பட்ட, காவிரி நீர் மேலாண்மை ஆணையம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு தொடர்ந்து செயல்படும். நிலத்தடி நீரை பாதுகாக்கும் பாதுகாவலனாக திகழும், பனை மரங்களை அதிகம் வளர்க்கும் வகையில், இந்த ஆண்டு, 10 கோடி ரூபாய் செலவில், 2.5 கோடி பனை விதைகள், விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளன.


latest tamil newsதமிழகம், மின் மிகை மாநிலமாக திகழ்கிறது. 9,000 மெகாவாட் திறனுள்ள, சூரிய மின் உற்பத்தி நிலையங்கள், 2023க்குள் அமைக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாங்கள், மிக மிக சாமானியர்கள். உங்கள் ஒத்துழைப்பால், சாதித்து உள்ளவைகளோ, மிகப் பெரியவை. இன்னும், நாம் சாதிக்க வேண்டியவற்றுடன் ஒப்பிடும்போது, இவை கடுகளவு தான். மாநில மக்களின் அறிவாற்றலோடும், அயராத உழைப்போடும், சாதிக்க வேண்டியதை, சாதித்தே தீருவோம். இவ்வாறு, அவர் பேசினார்.


இரு மொழி கொள்கை:


சுதந்திர தின விழாவில், முதல்வர் பேசியதாவது: ஹிந்தி பேசாத மாநில மக்கள் மீது, அந்த மொழி திணிக்கப்படக் கூடாது என்பதிலும், அவ்வாறு எடுக்கப்படும் முயற்சியை, எதிர்த்து முறியடிப்பதிலும், உறுதியாக உள்ளோம். தமிழக அரசு, இரு மொழி கொள்கையில், உறுதியாக உள்ளது. தமிழக மக்களை பாதிக்கும், எந்த திட்டமாக இருந்தாலும், அரசு அதை எதிர்த்து, மக்கள் நலனை பாதுகாப்பதில், முன்னோடியாக விளங்கும். தமிழகம், உலக அரங்கில், வளர்ச்சிப் பாதையில் செல்ல, அரசு உறுதியுடன் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு, அவர் பேசினார்.


latest tamil news
அத்தி வரதரை 1 கோடி பேர் தரிசனம்:


முதல்வரின் சுதந்திர தின விழா உரையில், 'அத்தி வரதர்' இடம் பெற்றார். முதல்வர் கூறியதாவது: காஞ்சிபுரத்தில், அத்தி வரதரை தரிசிக்க, லட்சக்கணக்கான பக்தர்கள் வந்தனர். அவர்களுக்கு உரிய பாதுகாப்பு, போக்குவரத்து, குடிநீர், மருத்துவம், அன்னதானம் போன்ற வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டன. பக்தர்கள் சீரிய முறையில், தரிசனம் செய்ய, ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழக அரசு செய்த, பல்வேறு நடவடிக்கைகளை பயன்படுத்தி, ஒரு கோடி பக்தர்கள், அத்தி வரதரை தரிசித்து சென்றுள்ளனர். இவ்வாறு, முதல்வர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajesh - Delhi,இந்தியா
17-ஆக-201904:12:41 IST Report Abuse
Rajesh வாய்க்கு வந்ததை ஒளறிட்டு போய்கிட்டே இருக்கவேண்டியது தான்
Rate this:
Cancel
Suresh - chennai,இந்தியா
16-ஆக-201915:46:13 IST Report Abuse
Suresh எடப்பாடிக்கும், பன்னீருக்கும் நல்ல 'பசை' வளம் உள்ள வரையில், தமிழகம் நீர் வளம் மிக்க மாநிலம் ஆகாது. நோ சான்ஸ்.
Rate this:
Cancel
KALIRAJ N -  ( Posted via: Dinamalar Android App )
16-ஆக-201915:40:55 IST Report Abuse
KALIRAJ N பாலாறு.....இத மறந்து போய் ரொம்ப நாளாச்சு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X