அரசியல் செய்தி

தமிழ்நாடு

உரிமை பறிப்பு ராஜ தந்திரமா? ரஜினிக்கு காங்., கேள்வி

Added : ஆக 16, 2019 | கருத்துகள் (11)
Advertisement

சென்னை:''காஷ்மீர் மக்களின் உரிமையை பறிப்பது, ராஜ தந்திரமா,'' என, நடிகர், ரஜினிக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர், கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பினார்.

சென்னை, சத்தியமூர்த்தி பவனில், சுதந்திர தின விழா, நேற்று கொண்டாடப்பட்டது. சேவாதளம் அணிவகுப்பு மரியாதையுடன், தேசியக் கொடியை, கே.எஸ்.அழகிரி ஏற்றினார்.இளைஞர் காங்கிரஸ் தலைவர், ஹசன் மவுலானா ஏற்பாட்டில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட, கேரள மக்களுக்கு, 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிவராண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

பின், அழகிரி அளித்த பேட்டி:சுதந்திர போராட்டத்தில், ஒரு நாள் கூட, சிறைக்கு செல்லாதோர், செங்கோட்டையில் கொடி ஏற்றுகின்றனர். பயங்கரவாதத்திற்கு எதிராக இருந்த, காஷ்மீர் மாநில தலைவர்களை, சிறையில் வைத்துள்ளனர்; இது, ஜனநாயகம் இல்லை.'காஷ்மீர் விவகாரத்தில், ராஜதந்திர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என, ரஜினி கூறுகிறார். காஷ்மீர் மக்களின் உரிமையை பறிப்பது தான், ராஜதந்திரமா என, அவரிடம் கேட்க விரும்புகிறேன்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Enrum anbudan - dammam,சவுதி அரேபியா
16-ஆக-201920:55:44 IST Report Abuse
Enrum anbudan இது அவர்களுடைய உரிமை இல்லை இந்தியா கொடுத்த சலுகை. மொதல்ல அதை தெரிஞ்சுக்கோங்க .
Rate this:
Share this comment
Cancel
Sadagopan Varadhachari - Hosur,இந்தியா
16-ஆக-201912:46:42 IST Report Abuse
Sadagopan Varadhachari சுதந்திர போராட்டத்தில் ஒரு நாளாவது சிறை சென்றவர் தான் கொடி ஏற்ற வேண்டுமென்றால் இப்போதுள்ள யாருமே கொடி ஏற்ற தகுதி இல்லாதவர்கள்தான் . குறிப்பாக சோனியா,ராகுல்,ப்ரியங்கா, ராபர்ட் வதேரா சிறையே செல்லாமல் மன்மொகன்சிங்க்,தேவேகௌடா போன்றவர்கள் கொடி ஏற்றும்போது நீங்கள் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்
Rate this:
Share this comment
Cancel
Idithangi - SIngapore,சிங்கப்பூர்
16-ஆக-201909:39:46 IST Report Abuse
Idithangi இந்த வெத்து ஆசாமி அழகிரி ரஜினியை பத்தி பேசி பெரிய ஆளு ஆக போறாராம். உன் பதவியோ இன்னமும் எத்தனை நாள் தெரியலை. நாளைக்கு ராகுல் பிரதமரா ஆனா அவர் செங்கோட்டையில் கோடி எதை மாட்டாரு. என்ன அவர் தான் சுதந்திர போராட்டத்தில் கலந்துக்கலேயே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X