370வது பிரிவு நீக்கத்தை எதிர்த்த வழக்குகள் இன்று விசாரணை

Updated : ஆக 16, 2019 | Added : ஆக 16, 2019 | கருத்துகள் (19)
Advertisement
370 வது பிரிவு

புதுடில்லி: ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த, அரசியல் சட்டத்தின், 370வது பிரிவு நீக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள், உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு முன், இன்று விசாரணைக்கு வரவுள்ளன.ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த, அரசியல் சட்டத்தின், 370வது பிரிவு சமீபத்தில் நீக்கப்பட்டது. மேலும், ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் என, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படுகிறது.


ஊரடங்கு உத்தவு


அதைத் தொடர்ந்து, அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையில், அங்கு, துணை ராணுவப் படைகள் கூடுதலாக குவிக்கப்பட்டன. பல பகுதிகளில், 144 தடை உத்தரவும், சில இடங்களில், ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக்கில் விதிக்கப்பட்டுள்ள கடும் கட்டுப்பாடுகளை நீக்கக்கோரி, அங்கிருந்து வெளியாகும், 'காஷ்மீர் டைம்ஸ்' என்ற, ஆங்கில நாளிதழ் சார்பில், கடந்த, 6ம் தேதி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.காஷ்மீர் டைம்ஸ் ஆசிரியர், அனுராதா பாஷின் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுஉள்ளதாவது:ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் முழுவதும், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து தொலை தொடர்பு வசதிகளும் முடக்கப்பட்டுள்ளன. இந்தக் கட்டுப்பாடுகளால், செய்தியாளர்கள் முடக்கப்பட்டுள்ளனர்.உடனடியாக, இந்தக் கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு உத்தரவிட வேண்டும்.ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த, 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதால், எதிர்மறையான விளைவுகள் ஏற்பட்டுள்ளன. மாநில சட்டசபையின் ஒப்புதல் இல்லாமல், இங்கு, 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டிருப்பது, சட்டவிரோதமானது.இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.இதே போல, ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர், பரூக் அப்துல்லாவின், தேசிய மாநாட்டு கட்சி சார்பிலும், 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதை எதிர்த்து, தனியாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.


பிரச்னை


இதைத்தவிர, மேலும் சிலரும், தனிப்பட்ட வகையில், இப்பிரச்னையில், வழக்கு தொடுத்துஉள்ளனர்.காங்.,கைச் சேர்ந்த, தஹ்சீன் புனேவாலா சார்பிலும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த, 13ம் தேதி, நீதிபதி, அருண் மிஸ்ரா தலைமையிலான, மூன்று நீதிபதிகள்அமர்வு, இவ்வழக்கை விசாரித்தது.அப்போது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான, அட்டர்னி ஜெனரல், கே.கே.வேணுகோபால், 'ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த சிலருக்கு, அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து உத்தரவுகள்வருகின்றன. ஜம்மு - காஷ்மீரில், சட்டம் - ஒழுங்கை பராமரிக்க வேண்டும் என்பதே, அரசின் முதல் இலக்கு. 'அதனால் தான், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அங்கு, பெரிய அளவில் வன்முறையோ, உயிரிழப்போ ஏற்படவில்லை. கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்பட்டு வருகின்றன' என்றார்.அதைத் தொடர்ந்து, 'ஜம்மு - காஷ்மீர் விவகாரம் மிகவும் முக்கியமான பிரச்னை. அங்கு அமைதியை ஏற்படுத்துவது தான், மத்திய அரசின் முக்கியமான பணி.இதற்கு கால அவகாசம் அளிக்கப்பட வேண்டும்' எனக்கூறி,எந்த உத்தரவையும் பிறப்பிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.இந்நிலையில், ஜம்மு - காஷ்மீர் தொடர்பான அனைத்து வழக்குகளும், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள், பாப்டே, நசீர் அடங்கிய சிறப்பு அமர்வு முன், இன்று விசாரணைக்கு வருகின்றன.


Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ashanmugam - kuppamma,இந்தியா
16-ஆக-201911:45:44 IST Report Abuse
Ashanmugam மத்திய அரசுக்கு ஆதரவாக தீர்ப்பு வரும். ஏனெனில் உச்ச நீதிமன்றம் மத்திய அரசின் " கை பாவை" என்பதை இந்திய மக்கள் மறக்ககூடாது.
Rate this:
Share this comment
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
16-ஆக-201917:10:25 IST Report Abuse
Chowkidar NandaIndia2G வழக்கில் மத்திய அரசுக்கு எதிராக தீர்ப்பு வந்ததே. பேப்பரில் வந்த செய்திகளை ஆதாரமாக கொண்டு ரபில் வழக்கு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டதே. சபரிமலையில் ஹிந்துக்களின் நம்பிக்கைக்கு எதிராக தீர்ப்பு வந்ததே. இவைகளை வைத்து உச்சநீதிமன்றம் யாருடைய "கை" பாவை என்று நினைக்க தோன்றுகிறது?...
Rate this:
Share this comment
Cancel
chails ahamad - doha,கத்தார்
16-ஆக-201911:44:22 IST Report Abuse
chails ahamad பொதுவாக ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும் , காஷ்மீரில் வாழும் அந்த குடி மக்களின் கருத்தறிந்து , பொது வாக்கெடுப்பு நடத்தி , அதன் மூலம் அந்த பகுதியை இந்தியாவுடன் முழுமையாக சேர்த்திருக்க நடவடிக்கை மேற்கொண்டு இருந்தால் , இன்றைக்கு இத்தனை பிரச்சனைகள் வழக்காக வந்திருக்க போவதில்லை , ஐ நா பாதுகாப்பு சபையிலும் இந்த நிமிடத்தில் விவாதித்து கொண்டு இருக்கவும் வாய்ப்புகள் இருந்திருக்காது , பிரச்சனைகள் வில்லங்கமாக இந்திய ஆட்சியாளர்களுக்கு தலைவலியாக மாறி விட்டதை ஒப்பு கொண்டேயாக வேண்டும் , மதவெறி மட்டுமே ஆட்சி நடத்திட போதுமான தகுதிகள் கிடையாது , மக்களின் அபிமானத்தை பெற்றிட மக்களுக்குகந்த ஆட்சியாக நடத்திட முயற்சிப்பதே , சுபிட்சமான ஆட்சியாக காணப்பட வழியேற்படுத்திடும் என்பதை உணர்ந்து ஆட்சியாளர்கள் , நாட்டின் நலன் விரும்பும் சான்றோர்களின் ஆலோசனைகளை பெற்று ஆட்சி நடத்திடுவது நன்மைகள் பயக்கும்.
Rate this:
Share this comment
Swaroopa Metha - Gopalapuram,இந்தியா
16-ஆக-201917:53:56 IST Report Abuse
Swaroopa Methaஅமைதி மார்க்கம் உன்கிட்ட யாரவது இவ்வளவு பெரிய கருத்துக் கேட்டார்களா. ஆட்சியார்களைப் பற்றி சொல்லற அளவுக்கு நீ என்ன சாணக்கியர் போன்ற புத்திசாலியா. அடங்கு...
Rate this:
Share this comment
Cancel
MONKEY BATH - Chennai,இந்தியா
16-ஆக-201911:24:28 IST Report Abuse
MONKEY BATH டீ கடை பென்ச். டீ மாஸ்டர் சொல்படிதான் நடக்கும். சம்பளம் உயர்த்தியதற்கு நன்றி செலுத்த வேண்டுமல்லவா.
Rate this:
Share this comment
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
16-ஆக-201917:07:21 IST Report Abuse
Chowkidar NandaIndiaஅப்போது ஊழல் ராணிக்கு ஆதரவாக 2G தீர்ப்பு வந்ததே. அது மட்டும் எப்படி. ஒருவேளை சூட்கேஸ் ரகசியமோ?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X