சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

வேலுார் வெற்றியும், பா.ஜ., கொடையே!

Added : ஆக 16, 2019 | கருத்துகள் (8)
Share
Advertisement
 வேலுார் வெற்றியும், பா.ஜ., கொடையே!

ஜனநாயகத்தில் ஒவ்வொரு தேர்தலும், பல கேள்விகளுக்கு பதில் சொல்லும். அப்படித் தான், வேலுார் லோக்சபா தேர்தலும், பல கேள்விகளுக்கு பதில் தெரிவித்துள்ளது. முதலில், கேள்விகள் என்ன என்று தெரிந்து கொள்வோம்.

மே மாதம் நடந்த, லோக்சபா தேர்தலில், 'மீண்டும், பா.ஜ., ஆட்சி தொடர வேண்டுமா...' என்ற, ஒரு கேள்வி தான் இருந்தது. அந்தக் கேள்விக்கு மக்கள் பதில் அளித்து விட்டனர். மத்தியில், பா.ஜ., ஆட்சி அமைத்து, நரேந்திர மோடி பிரதமராகி விட்டார். எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்த, காங்கிரஸ் கட்சியின் ராகுல், தன் தலைவர் பதவியை துறந்து விட்டார்.

அப்படியென்றால், வேலுார் தேர்தலில் என்ன கோஷம் முன்வைக்கப்பட்டது; உண்மையில் ஒன்றும் இல்லை. ஆனால், தமிழகத்தில் இருக்கும் முக்கிய கட்சிகள், வேறு கேள்விகளோடு கிளம்பின. தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ள, இந்தத் தேர்தலை பயன்படுத்தின.லோக்சபா தேர்தலில், தி.மு.க., பெற்ற வெற்றி, ராகுலால் கிடைத்தது; அவரை பிரதமராக முன்னிறுத்தியதால் கிடைத்தது என்ற கருத்து, பரவலாக முன்வைக்கப்பட்டது.

'உண்மையில், இந்த வெற்றி தங்களுக்கு கிடைத்த வெற்றி; தங்கள் தலைவரின் ஆளுமைக்கு கிடைத்த அங்கீகாரம்' என்று, நிரூபிக்க வேண்டிய தேவை, தி.மு.க.,வுக்கு எழுந்தது. அதனால், காங்கிரசையோ, ராகுலையோ முன்னிலை படுத்தாமல், தேர்தலை சந்திக்க, தி.மு.க., முனைந்தது. இன்னொருபுறம், பா.ஜ.,வையோ, நரேந்திர மோடியையோ முன்னிறுத்தாமல், தேர்தலில், ஏ.சி.சண்முகத்தை, அ.தி.மு.க., இறக்கியது.

அவர்களுக்கு வேறு பிரச்னை. அதாவது, பா.ஜ.,வுடன் சேர்ந்ததால் தான், தேர்தலில் தோற்றோம் என்பதை நிரூபிக்க வேண்டிய தேவை, அ.தி.மு.க.,வுக்கு வந்தது.தங்களின் சொந்த பலம், இன்னும் அப்படியே தான் உள்ளது; அதில், சேதாரமில்லை என்பதை, தமிழகத்துக்கும், பா.ஜ.,வுக்கும் உணர்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது. இதனால், அவர்கள் களத்தில் இறங்கினர்.

பிரசாரம்

பிரசாரம் தொடங்கிய, முதல் சில நாட்கள் சுவாரசியமே இல்லை; பின்னரும் பெரிய வேகம் இல்லை. உண்மையில், வேலுாரில் பேசுவதற்கு ஒரு பிரச்னையும் இன்றி, தடுமாறி கொண்டிருந்தனர்.அப்போது தான், மத்திய அரசு, தேசிய பாதுகாப்பு முகமை மற்றும் முத்தலாக் திருத்த மசோதாக்களை, பார்லிமென்டில் எடுத்து வந்தது.

இதில், தேசிய பாதுகாப்பு முகமை சட்டத்துக்கு, தி.மு.க., ஆதரவு அளித்தது. முத்தலாக் மசோதாவுக்கு, லோக்சபாவில், ஆதரவு; ராஜ்யசபாவில் எதிர்ப்பு என்ற நிலையை, அ.தி.மு.க., எடுத்தது. ஆனால், ஓட்டெடுப்பு நடந்த போது, வெளிநடப்பு செய்து விட்டனர். இது தான், அப்போது உடனடியாக பற்றிக் கொண்டது.

'சிறுபான்மையினரின் காவலர்கள் யார்?' என்ற கேள்வி, வேலுாரில் முக்கிய பிரச்னையாக எழுந்தது. அ.தி.மு.க., - தி.மு.க., இரண்டுமே, எதிர் தரப்புகளை புரட்டிப் போட்டன. இதன் தொடர்ச்சியாக, 'சிறுபான்மையினர் மற்றும் மாநில உரிமைகள் பறிக்கப்படுகின்றன. அதற்கு காரணம், மோடியும், அவருக்கு ஆதரவாக உள்ள தமிழக அரசும் தான்' என்ற பிரசாரத்தை, தி.மு.க., முடுக்கி விட்டது.

இந்த பிரசாரம், கடைசி நான்கு நாட்களில், சிறுபான்மையினர் பெருமளவு வாழும் வாணியம்பாடி, ஆம்பூர், வேலுார் ஆகிய பகுதிகளுக்கு, எடுத்து செல்லப்பட்டது. 'சிறுபான்மையினர் பாதுகாப்புக்கு, தி.மு.க., தான் அரணாக இருக்க முடியும்' என்ற பிரசாரம் முன் வைக்கப்பட்டது.சிறுபான்மையினர் ஓட்டுவேலுார் தேர்தல் முடிவுகள் வெளியான போது, இந்த பிரசாரம் எவ்வளவு துாரம் எடுபட்டுள்ளது என்பதைப் பார்க்க முடிந்தது.
வேலுார், அணைக்கட்டு, ஆம்பூர், வாணியம்பாடி, குடியாத்தம் - தனி, கீழ்வைத்தாணன் குப்பம் - தனி ஆகிய சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கியது தான், வேலுார் தொகுதி.இதில், மொத்தம் பதிவானவற்றில், வேலுார் -- 6,365; ஆம்பூர், 8,603; வாணியம்பாடி - 22 ஆயிரத்து, 323 ஓட்டுகள், அ.தி.மு.க.,வை விட, தி.மு.க.,வுக்கு அதிகம் கிடைத்தன. மற்ற மூன்று சட்டசபை தொகுதிகளில், அ.தி.மு.க., அதிக ஓட்டுக்களை பெற்றுள்ளது.

சிறுபான்மையினர் மத்தியில், பா.ஜ., மீதான அச்சத்தை கிளப்பி விட்டதாலேயே, மூன்று சட்டசபை தொகுதிகளில், தி.மு.க.,வால் கூடுதல் ஓட்டுக்களை பெற முடிந்துள்ளது. ஒரு வகையில், வேலுார் வெற்றியும், தி.மு.க.,வுக்கு, பா.ஜ., வழங்கிய கொடை தான்.பதில்கள்சரி, தி.மு.க., அறிய விரும்பிய கேள்விக்குப் பதில் கிடைத்ததா; கிடைத்தது.முந்தைய தேர்தலில், பல தொகுதிகளில் லட்சக்கணக்கான ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற, தி.மு.க., வேலுார் தேர்தலில், சில ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தான், ஜெயிக்க முடிந்துள்ளது.

அதாவது, பக்கத்தில், காங்கிரஸ் இருந்ததால் தான், அத்தகைய பெரிய வெற்றி கிடைத்தது என்பதை, வேலுார் தேர்தல் நிரூபித்துள்ளது.இது, காங்கிரசுக்கு ஒரு வகையில் மகிழ்ச்சி. லட்சக்கணக்கான ஓட்டுக்கள் வித்தியாசத்தில், தி.மு.க., ஜெயித்திருந்தால், நிச்சயம், காங்கிரசை கழற்றி விட, தி.மு.க., தயங்கி இருக்காது. அது, நடைபெறவில்லை என்ற போது, தி.மு.க., - - காங்கிரஸ் கூட்டணி தொடரும். அதுவும் சிறுபான்மையினர் ஓட்டுக்கள் தான், தி.மு.க.,வை காப்பாற்றியது என்பதால், காங்கிரசும் அதற்கு உரிமை கொண்டாடும்.

தங்களுடைய செல்வாக்கு வீழ்ச்சியடையவில்லை என்பதை தான், அ.தி.மு.க., நிரூபிக்க விரும்பியது; அதுவும் நடந்து விட்டது. மிகச்சிறிய வித்தியாசத்தில் தான் தோல்வி எனும் போது, இது, முதல்வர், இ.பி.எஸ்., முயற்சிக்கும், வியூகத்துக்கும் கிடைத்த வெற்றியாக பார்க்கப் படுகிறது. லோக்சபா பொதுத்தேர்தலில், 18 சதவீத ஓட்டுக்கள் மட்டுமே பெற்ற, அ.தி.மு.க., இந்த முறை, 46.51 சதவீதம் பெற்றிருப்பதும் வளர்ச்சியே.

ஆனால், இன்னொரு கேள்விக்கு முற்றிலும், வேறு மாதிரியான விடை கிடைத்துள்ளது. பா.ஜ.,வை விலக்கி வைத்துவிட்டு, தம்மால் வெற்றி பெற முடியும் என, அ.தி.மு.க., நிரூபிக்க விரும்பியது; அது, நடைபெறவில்லை.பா.ஜ.,வுக்கும், இத்தேர்தலில் ஒரு செய்தி இருக்கிறது.

தமிழகத்தில், கடைசி நேரத்தில், பா.ஜ., எதிர்ப்பு பிரசாரத்தை வலிமையாக செய்ததால் தான், சென்ற முறைபோல, இம்முறையும், தி.மு.க., பலன் பெற்றுள்ளது. ஆனால், பா.ஜ., மீதும், மோடி மீதும், முன்பு இருந்த அதிருப்தி, படிப்படியாக குறைந்து வருகிறது என்பதும் நிரூபணமாகிஉள்ளது.
அதனால் தான், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் இருந்தாலும், கிட்டத்தட்ட, 4.77 லட்சம் ஓட்டுக்களை பெற முடிந்திருக்கிறது. எதிர் பிரசாரங்களை முறியடிப்பதன் வாயிலாக, பா.ஜ., தன்னை, இங்கே நிலைநிறுத்திக் கொள்ள முடியும்.மொத்தத்தில், தமிழக மக்கள், அ.தி.மு.க., வையும், பா.ஜ.,வையும் முற்றாக நிராகரிக்கவில்லை. அதேசமயம், தி.மு.க.,வுக்கு பெரும் ஆதரவும் வழங்கிவிடவும் இல்லை என்பதுதான், வேலுார் தேர்தலின் செய்தி.

ஆர்.வெங்கடேஷ்pattamvenkatesh@gmail.com

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
19-ஆக-201912:14:16 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் பாஜக என்ற கட்சியை பற்றி எவனுமே கண்டுகொள்ளவில்லை என்பது தான் இதிலிருந்து தெரியும் உண்மை.
Rate this:
Cancel
Varatharaajan Rangaswamy - Tiruchirappalli ,இந்தியா
18-ஆக-201905:18:14 IST Report Abuse
Varatharaajan Rangaswamy மிகச்சரியாக சொல்லியுள்ளீர்கள் தேர்தல் பற்றிய ஆய்வு நல்லபடியாக விவரிக்கப்பட்டுள்ளது
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
17-ஆக-201922:04:22 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் யானையை கல்யாணம் பண்ணின எலி, யானை கிட்டே வலிக்குதான்னு கேட்டுச்சாம்.. அந்த கதை தான் ஞாபகத்துக்கு வருது.
Rate this:
uthappa - san jose,யூ.எஸ்.ஏ
18-ஆக-201914:46:10 IST Report Abuse
uthappaஉனக்கு வேறு என்ன நினைவுக்கு வர முடியும் ....
Rate this:
Sathya Dhara - chennai,இந்தியா
18-ஆக-201919:42:50 IST Report Abuse
Sathya Dhara திரு Uthappa - San Jose,யூ.எஸ். அவர்களே.....உங்களுக்கு மேலே உள்ள ஜைஹிந்த் புரம்......அவ்வப்போது ஏதாவது காமெடி செய்வார். அதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X