பொது செய்தி

தமிழ்நாடு

கான்கிரீட் வீடு கட்டம் திட்டம்: விண்ணப்பம் செய்ய அழைப்பு

Added : ஆக 16, 2019
Advertisement

ஈரோடு: பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், நகர்புறங்களில் வசிக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய, ஏழைகளுக்கு வீடு கட்டிக் கொள்ள, 2.10 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது. இத்திட்டத்துக்காக, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில், ஈரோடு மாவட்டத்தில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். வசிக்கும் இடத்தில், 300 சதுரடி பரப்பில் கான்கிரீட் வீடு கட்டிக் கொள்ள வேண்டும். மானியமாக, 2.10 லட்சம் ரூபாய் பயனாளியின் வங்கி கணக்கில், நான்கு தவணைகளாக வரவு வைக்கப்படும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதியில், சொந்த இடத்தில் குடிசை வீடு, ஓட்டு வீடு அல்லது காலி மனை வைத்திருக்க வேண்டும். பயனாளியின் பெயரில் பட்டா அல்லது பத்திரம் வைத்திருக்க வேண்டும். பயனாளிகள் குடும்ப ஆண்டு வருவாய், மூன்று லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். பயனாளியின் பெயரில் அல்லது பயனாளியின் குடும்பத்தாரின் பெயரில் வேறு வீடு, இருக்கக்கூடாது. ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வங்கி கணக்கு பாஸ் புத்தகம், பட்டா, பத்திரம் ஆகியவற்றின் நகல்களை வழங்க வேண்டும். விண்ணப்பம் செய்ய, 'உதவி நிர்வாக பொறியாளர் அலுவலகம், முதல் தளம், பிரகாஷ் காம்ப்ளக்ஸ், கவுந்தப்பாடி சாலை, சித்தோடு. போன்: 86680 05607, 88255 38131' என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X