காடையம்பட்டி கிராமசபை கூட்டத்தில் மக்கள் முற்றுகை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

காடையம்பட்டி கிராமசபை கூட்டத்தில் மக்கள் முற்றுகை

Added : ஆக 16, 2019

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உள்ள, 225 பஞ்சாயத்துக் களிலும், சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம், நேற்று நடந்தது. மொடக்குறிச்சி அருகே நஞ்சை ஊத்துக்குளி, சாமிநாதபுரத்தில் நடந்த கிராமசபை கூட்டத்தில், கலெக்டர் கதிரவன் தலைமை வகித்து, மனுக்களை பெற்றார். பவானி தாலுகா, காடையம்பட்டி கிராமசபை கூட்டத்தில், மக்கள் ஒன்று கூடி, 'சாய, சலவை ஆலைகளின் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யும், பொது கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலை அமைக்கக்கூடாது' என தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தினர். பஞ்சாயத்து அதிகாரி, அவ்வாறு நிறைவேற்ற இயலாது எனக்கூறியதால், அதிகாரியை முற்றுகையிட்டனர். மாவட்ட நிர்வாகத்திடம் மனு வழங்கும்படி வலியுறுத்தியதை தொடர்ந்து, மக்கள் கலைந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X