பொது செய்தி

தமிழ்நாடு

சுதந்திர தினவிழா கோலாகல கொண்டாட்டம்: ரூ.1.46 கோடிக்கு நலத்திட்ட உதவி

Added : ஆக 16, 2019
Advertisement

ஈரோடு: ஈரோடு வ.உ.சி., விளையாட்டு மைதானத்தில் நடந்த, சுதந்திர தினவிழாவில், தேசிய கொடியை ஏற்றி வைத்து, 1.46 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, கலெக்டர் கதிரவன் வழங்கினார்.
ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில், வ.உ.சி., விளையாட்டு மைதானத்தில், கலெக்டர் கதிரவன், தேசிய கொடியை ஏற்றி வைத்து, போலீஸ் அணிவகுப்பு மரியாதையை நேற்று ஏற்றார். சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவித்துவிட்டு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வேளாண் துறை உட்பட பல்வேறு துறைகள் சார்பில், 152 பயனாளிகளுக்கு, 1.46 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். போலீஸ் உட்பட பல்வேறு துறைகளில் சிறந்த விளங்கிய, 335 பேருக்கு நற்சான்றிதழ் வழங்கினார். பின், பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சி நடந்தது. எஸ்.பி., சக்தி கணேசன், டி.ஆர்.ஓ., கவிதா, ஆர்.டி.ஓ., முருகேசன், சி.இ.ஓ., பாலமுரளி, ஈரோடு தலைமை வனக்காப்பாளர் நாகநாதன் உட்பட பலர் பங்கேற்றனர். ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில், ஆணையர் இளங்கோவன், நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதி உமாமகேஸ்வரி ஆகியோர் தேசிய கொடியேற்றினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X