பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - ஈரோடு

Added : ஆக 16, 2019
Advertisement

தீபகம்பத்தின் பின் மரக்கழிவு: ஈரோடு, கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவில், ராஜகோபுரம் எதிரில் தீப கம்பம் உள்ளது. இதை சுற்றி வலம் வரும் வகையில் விடப்பட்ட இடத்தில், அப்பகுதியில் உள்ள சிலர், மரப்பெட்டி மற்றும் தட்டுமுட்டு சாமான் உள்ளிட்ட, கழிவுகளை போட்டு வைத்துள்ளனர். இதனால் இடையூறு ஏற்படுகிறது. அந்த இடத்தில் செல்லும் சாக்கடையை, துப்புரவு பணியாளர்கள் சுத்தம் செய்ய முடியவில்லை. மாநகராட்சி பணியாளர்கள் இவற்றை அகற்ற வேண்டும்.
கம்பத்தில் சிக்கிய ஓலையால் ஆபத்து: பங்காளப்புதூர்-சத்தியமங்கலம் வழியில், கல்லூரி பிரிவு சாலையோரத்தில், மின்கம்பம் உள்ளது. பனைமரங்கள் நிறைந்த பகுதியில், காற்றுக்கு விழுந்த பனை ஓலை ஒன்று மின் கம்பத்தில் சிக்கியுள்ளது. அதேபோல், கம்பத்தின் அருகே, மின் இணைப்பு பாதையிலும், மற்றொரு பனை ஓலை சிக்கியுள்ளது. தற்போது அடிக்கடி பெய்யும் மழையால், மின்கம்பியில் சிக்கியுள்ள பனை ஓலையால், மின் விபத்து ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

சாக்கடை நீரால் சுகாதார சீர்கேடு: புன்செய்புளியம்பட்டி அடுத்த, நல்லூர் பஞ்., எரங்காட்டுப்பாளையத்தில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் சாக்கடையில் தேங்கியுள்ளது. கொசு உற்பத்தி அதிகரித்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. பஞ்., நிர்வாகத்திடம் பலமுறை புகாரளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. மர்ம காய்ச்சல் பயம் ஏற்பட்டுள்ளதாக, மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

சாலையோரத்தில் குப்பை குவிப்பு: ஈரோடு மாநகராட்சி, வெண்டிப்பாளையம் பேரேஜ் செல்லும் வழியில், காளிங்கராயன் வாய்க்கால் உள்ளது. இந்த இடத்தில், வீடுகளில் சேகரமாகும் கழிவு, குப்பையை கொட்டி, தீ வைப்பது வாடிக்கையாக உள்ளது. இதனால் சாலையில் செல்லும் மக்கள், தீ மற்றும் புகையால் பாதிக்கின்றனர். பிரதான சாலையோரத்தில் குப்பை கொட்டுவதை தடுக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X