பொது செய்தி

தமிழ்நாடு

மின் கேபிள் பணிக்காக தோண்டியதால் காரைவாய்க்கால் செல்லும் சாலை துண்டிப்பு

Added : ஆக 16, 2019
Advertisement

ஈரோடு: மின் கேபிள் பதிக்கும் பணிக்காக, இடைவிடாமல் சாலையை தோண்டி போட்டுள்ளதால், காரை வாய்க்கால் செல்லும் சாலை துண்டிக்கப்பட்டது.
தமிழக மின்துறையின் பங்களிப்போடு, தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மான கழகங்களின் ஒட்டு மொத்த தொழில்நுட்ப, வர்த்தக இழப்பீடுகளை குறைப்பதற்கும், நகர்ப்புறங்களில் தடையற்ற சீரான மின்சாரம் வழங்குவதற்கும், பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், ஈரோடு மின் பகிர்மான வட்டத்தில், 161.27 கோடி ரூபாய்க்கு பணி செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டது. முதல் கட்டமாக, ஈரோடு மாநகரின் முக்கிய சாலைகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் செல்லும் மேல்நிலை கம்பிகளை அகற்றி, புதைவடங்களாக மாற்ற, 58.96 கோடி ரூபாய்க்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, 69.11 கி.மீ.,க்கு உயர் மின்னழுத்த புதைவடமும், 92.33 கி.மீ.,க்கு தாழ் மின்னழுத்த புதைவடமும், 617.48 கி.மீ.,க்கு வீட்டு மின் இணைப்புக்கான புதை வட மின் கேபிள்களும் அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. ஈரோட்டில் பல இடங்களில், சாலையில் புதைவட மின் கேபிள் பதிக்கும் பணியில் ஆழமான குழி தோண்டப்பட்டு, ரோலர்கள் நிறுத்தி கேபிள்கள் இறக்கப்பட்டு வருகின்றன. நேற்று ஈரோடு டவுன் போலீஸ் ஸ்டேஷன் ரோட்டில் துவங்கி, மரப்பாலம் செல்லும் சாலையில், 150 மீட்டர் நீளத்துக்கு சாலை தோண்டி போடப்பட்டது. இதனால், கச்சேரி வீதி மற்றும் காரைவாய்க்கால் செல்லும் சாலை துண்டிக்கப்பட்டது. இதையடுத்து, அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கும், வர்த்தக நிறுவனங்களுக்கும் செல்லும் பலர், சிரமத்துக்கு ஆளாகினர். மின்கேபிள் பதிப்பதற்காக, குழி தோண்டும் போது வீடுகள் அதிகம் உள்ள வீதிகளுக்கு, செல்லும் வகையில் இடைவெளி விட்டு தோண்ட வேண்டும் என, பொதுமக்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X