பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்மார்ட் கார்டு லைசென்ஸ்: 16 ஆயிரம் பேருக்கு வழங்கல்

Added : ஆக 16, 2019
Advertisement

ஈரோடு: இருசக்கர, நான்கு சக்கரம் உட்பட அனைத்து விதமான வாகன ஓட்டிகளுக்கும், தற்போது, ஸ்மார்ட் கார்டு வடிவில், க்யூ.ஆர்., கோடு வசதியுடன், லைசென்ஸ் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த பிப்., முதல் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் புதிய மற்றும் ரினிவல்களுக்கு வரும் லைசென்ஸ்களுக்கு பதில், புதிய ஸ்மார்ட் கார்டு வழங்கப்படுகிறது. இவற்றில் தகவல்களை அளித்தல், திருத்தம் செய்தல் இயலாது. ஆனால், கூடுதல் தகவல்களை பதிவு செய்து கொள்ளலாம். மைக்ரோ சிப் பொருத்தப்பட்டுள்ளதால், புதுப்பித்து கொள்ளலாம்.

இதுகுறித்து ஈரோடு ஆர்.டி.ஓ.,க்கள் கிழக்கு விநாயகம், மேற்கு ரகுபதி கூறியதாவது: தற்போது, அனைத்து வகையான பதிவுகளும் ஆன்லைனில் செய்ய வேண்டும். புதிதாக மற்றும் ரினிவல்களுக்கு வருவோருக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படுகிறது. மற்றவர்கள், 200 ரூபாய் கட்டணம் செலுத்தி, கார்டை பெறலாம். இதன்படி ஈரோடு கிழக்கு பகுதியில், 9,850 ஸ்மார்ட் கார்டு, மேற்கில், 3,000 கார்டும், பெருந்துறை பகுதியில், 3,500 கார்டு என, 15 ஆயிரத்து, 800 கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இதுபோன்று, ஆர்.சி., புத்தகமும் ஸ்மார்ட் கார்டு வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X