பொது செய்தி

தமிழ்நாடு

கிராமசபை கூட்டத்தில் தீர்மானத்தை ஏற்க மறுப்பு: ஓட்டம் பிடித்த அதிகாரிகள்; மக்கள் அதிர்ச்சி

Added : ஆக 16, 2019
Advertisement

சத்தியமங்கலம்: கிராமசபை கூட்டத்தில், மக்கள் அளித்த தீர்மானங்களை ஏற்காமல், அதிகாரிகள் ஓட்டம் பிடித்ததால், வாயில் கறுப்புதுணி கட்டி, மக்கள் போராட்டம் நடத்தினர்.
கோபி அருகே, டி.என்.பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட, கொங்கர்பாளையம் ஊராட்சி கிராம சபை கூட்டம், நேற்று நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர் தலைமை வகித்தார். ஊராட்சி செயலாளர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கொங்கர்பாளையம் ஊராட்சி மக்கள், 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஊராட்சியில் நடக்கும், ஊரக வேலை வாய்ப்பு உறுதித்திட்ட பணியாளர்களுக்கு, உரிய சம்பளம் வழங்குவதில்லை. பணிக்கு வராதவர்களின் வங்கிகளில் பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. இந்த முறைகேட்டுக்கு, 12 ஆண்டுகளாக இடமாற்றம் செய்யப்படாத, ஊரக வேலை வாய்ப்பு மேற்பார்வையாளரே காரணம். அவரை பணிமாற்றம் செய்ய, தீர்மானம் நிறைவேற்றுமாறு மக்கள் கோரிக்கை வைத்தனர். இதை அதிகாரிகள் கண்டு கொள்ளாததால், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், கூட்டத்தை தொடர முடியாமல் அதிகாரிகள் ஓட்டம் பிடித்தனர். அதன்பின், இரண்டு மணி நேரம் கழித்து, டி.என்.பாளையம் பி.டி.ஓ., பசீர் அகமது, பங்களாபுதூர் போலீசார் கூட்டத்தை தொடர்ந்தனர். அப்போதும், தங்களின் கோரிக்கையை தீர்மானமாக நிறைவேற்ற வலியுறுத்தினர். பி.டி.ஓ., மறுப்பு தெரிவித்தார். 'மக்களின் கோரிக்கையை நிறைவேற்றவே, கிராமசபை கூட்டம் நடத்தப்படுகிறது. அதிகாரிகளின் கருத்துகளை தீர்மானமாக நிறைவேற்றக்கூடாது' என்று கூறி, மக்கள் பலத்த வாக்குவாத்தில் ஈடுபட்டனர். இதனால் பி.டி.ஓ.,வும் தீர்மான கோரிக்கைகளை அங்கேயே வீசிவிட்டு ஓடிவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள், பி.டி.ஓ.,வின் செயலை கண்டித்து, வாயில் கறுப்புத்துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து கலெக்டர், ஆர்.டி.ஓ.,விடம் மனு தரப்போவதாக மக்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X