பொது செய்தி

தமிழ்நாடு

கேண்டீன் பொருட்களை எடுத்துவர வஜ்ரா வாகனம் உபயோகம்

Added : ஆக 16, 2019
Advertisement

ஈரோடு: கலவரங்கள் நடைபெறும் பகுதியில் பயன்படுத்த வேண்டிய வஜ்ரா வாகனம், போலீஸ் கேண்டீன் பொருட்களை எடுக்க, ஈரோட்டில் பயன்படுத்தப்படுகிறது.
கலவரம் நடக்கும் பகுதியில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்க செல்லும் போலீசாருக்கு உதவியாக துப்பாக்கி, லத்தி, தடுப்பு கவசங்கள், ஹெல்மெட், கயிறு, கண்ணீர் புகை குண்டுகள் உள்ளிட்டவை மட்டுமின்றி போலீசாரை அழைத்து செல்லவும், கலவரத்தை தடுக்கவும், சில ஆண்டுக்கு முன், வஜ்ரா வாகனம் அறிமுகப்படுத்தபட்டது. ஈரோடு மாவட்டத்தில் ஆயுதப்படை கட்டுப்பாட்டில் வஜ்ரா வாகனம் உள்ளது. முக்கியமான ஊர்வலங்கள், சாலை மறியல், மாநாடு உள்ளிட்டவற்றுக்கு மட்டும் துவக்க காலத்தில் பயன்படுத்தப்பட்டது. தற்போது பல்வேறு பயன்பாட்டுக்கும் உபயோகப்படுத்தப்படுகிறது. குறிப்பாக ஈரோடு எஸ்.பி, அலுவலக வளாகத்தில் உள்ள, போலீஸ் கேண்டீனுக்கு பொருட்கள் கொண்டு வரவும், வெளி மாவட்டங்களுக்கு எடுத்து செல்லப்பட்ட சமையல் பாத்திரங்களை, கொண்டு வந்து கொடுக்கவும் பயன்படுத்தப்படுகிறது. வஜ்ரா வாகனம், அடிக்கடி மாநகருக்குள் சுற்றி வருவதால், மக்கள் பீதி அடைந்துள்ளனர். ஆயுதப்படையில் போதிய வாகனங்கள் இல்லாததால், வஜ்ரா வாகனம் பொது பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டதா? என்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X