சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அந்தியூர் அருகே குவாரியில் மீண்டும் பணி: கல் ஏற்றிய லாரிகளை சிறைபிடித்த மக்கள்

Added : ஆக 16, 2019
Advertisement

அந்தியூர்: அந்தியூர் அருகே, கல் குவாரியில் மீண்டும் பணி தொடங்கிய நிலையில், கல் ஏற்றிச் சென்ற லாரிகளை, மக்கள் சிறைபிடித்தனர்.
பவானி அருகே பருவாச்சியில், பாலம்பாளையம் செல்லும் சாலையில், ஈரோட்டை சேர்ந்த குருபாலாஜி, என்பவருக்கு சொந்தமான, இரண்டு ஏக்கர் பரப்பிலான கல்குவாரி உள்ளது. இங்கு பாறைகளை உடைப்பதற்கு வைக்கப்படும் வெடியால், பாதிப்பு ஏற்படுவதாக, பாலம்பாளையம், பிச்சாம்பாளையம் மற்றும் பருவாச்சி கிராம மக்கள், முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பினர். இதையடுத்து பவானி தாசில்தார் வீரலட்சுமி, கல்குவாரிக்கு சென்று ஆய்வு செய்தார். கல் உடைக்க கூடாதென, வாய்மொழி உத்தரவாக கூறிச்சென்றார். அவர் இடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் குவாரியில், நேற்று மீண்டும் வேலை தொடங்கியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள், 100க்கும் மேற்பட்டோர் கல்குவாரிக்கு சென்றனர். அங்கிருந்து கற்களை ஏற்றிசென்ற, இரண்டு லாரிகளை சிறைபிடித்தனர். தாசில்தார், அந்தியூர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். மாவட்ட நிர்வாகத்திடம் கூறி, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறவே, மக்கள் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X