சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பள்ளி மாணவி கடத்தல்; ஆட்டோ டிரைவர் மீது புகார்

Added : ஆக 16, 2019
Advertisement

புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி அருகே, தண்ணீர் பிடிக்க சென்ற, பள்ளி மாணவியை, ஆட்டோ டிரைவர் கடத்தி விட்டதாக, பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். கோபியை அடுத்த, காசிபாளையம், காந்திநகரை சேர்ந்த, பழனிசாமி என்பவரின், 17 வயது மகள், பிளஸ் 2 படித்து வருகிறார். நேருநகர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், உறவினருக்கு கடந்த சில நாட்களாக, துணையாக இருந்தார். கடந்த, 13ல் குடிதண்ணீர் பிடிப்பதற்காக சென்ற மாணவி, திரும்ப வரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில், காசிபாளையத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கோபாலகிருஷ்ணன், மகளை கடத்தி சென்று விட்டதாக, மாணவியின் பெற்றோர், புன்செய்புளியம்பட்டி போலீசில், புகார் தந்தனர். வழக்குப்பதிந்த போலீசார், மாணவியை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X