பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - தர்மபுரி

Added : ஆக 16, 2019
Advertisement

பூட்டிய நூலகம்; வாசகர்கள் அவதி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த, எச்.புதுப்பட்டி பஞ்.,ல், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், 2010-11ல், நூலக கட்டடம் கட்டப்பட்டது. சில ஆண்டுகள் மட்டுமே செயல்பட்டு வந்த நூலகம் தற்போது, பூட்டியுள்ளது. இப்பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வாசகர்கள் பயனடையும் வகையில், பூட்டியுள்ள நூலகத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காட்சி பொருளான தண்ணீர் தொட்டி: லளிகத்தில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்குள்ள புதுவீதியில், கடந்த, ஆறு ஆண்டுகளுக்கு முன், பஞ்., நிர்வாகம் சார்பில், சின்டெக்ஸ் தண்ணீர்தொட்டி அமைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த, மூன்று ஆண்டுகளுக்கு முன், இதன் மின்மோட்டாரில் பழுது ஏற்ப்பட்டது, இதனால், இதில் தண்ணீர் வருவதில்லை. இதை சீரமைக்கக்கோரி, அதிகாரிகளுக்கு பலமுறை வேண்டுகோள் விடுத்தும், நடவடிக்கை இல்லை. இதை சீரமைக்க வேண்டும்.

அள்ளாத சாக்கடை; மக்கள் அவஸ்தை: நல்லம்பள்ளி பஞ்., கோவிலூரில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள வீதிகளில், சாக்கடை முறையாக அள்ளப்படுவதில்லை. பல இடங்களில் சாக்கடை கால்வாய் அடைத்து கொண்டு, கழிவுநீர் தேங்கி, துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. இங்கு கொசு உற்பத்தியாவதால், பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படுகிறது. இதை சீரமைக்கக்கோரி, அதிகாரிகளுக்கு பலமுறை வேண்டுகோள் விடுத்தும் நடவடிக்கை இல்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X