சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசு பஸ் டிரைவரை தாக்கிய 3 பேருக்கு காப்பு

Added : ஆக 16, 2019
Advertisement

பென்னாகரம்: பென்னாகரம் அருகே, அரசு பஸ் ஓட்டுனரை தாக்கிய நான்கு பேர் மீது, வழக்குப்பதிவு செய்த போலீசார் மூன்று பேரை கைது செய்துள்ளனர்.
பென்னாகரம் அடுத்த மடம் கிராமத்தை சேர்ந்தவர் மாதேஷ் 45, பென்னாகரம் டிப்போவில் அரசு பஸ் டிரைவராக உள்ளார். இவர், நேற்று முன்தினம் காலை, 9:00 மணிக்கு தர்மபுரியிலிருந்து பென்னாகரம் நோக்கி, அரசு பஸ்சை ஓட்டி வந்துள்ளார். அப்போது, சோகத்தூர் கூட்டு ரோட்டில் பஸ்சை ஒருவர் நிறுத்த முயன்றுள்ளார். ஆனால், பஸ் நிற்காமால், சென்றுள்ளது. இந்நிலையில், பி.அக்ராஹகரம் பஸ் நிறுத்தத்தில் ஏறிய நான்கு பேர், ஓட்டுனர் மாதேசை தாக்கி உள்ளனர். இதுதொடர்பாக, அவர், பென்னாகரம் போலீசில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், சோளப்பாடியை சேர்ந்த சின்னமுத்து, 35, தாளப்பள்ளத்தை சேர்ந்த சரேஷ்குமார், 38, அதேபகுதியை சேர்ந்த பூமாலை, 56 உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்து, தலைமறைவாக உள்ள கிருஷ்ணமூர்த்தியை, தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X