சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பொதுமக்கள் வாக்குவாதத்தால் கிராமசபை கூட்டத்தில் சலசலப்பு

Added : ஆக 16, 2019
Advertisement

பாலக்கோடு: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தாலுகாவுக்கு உட்பட்ட அமானிமல்லாப்புரம் பஞ்., க்கு உட்பட்ட நாராயணன் கொட்டாயில், நேற்று கிராமசபா கூட்டம் நடந்தது. துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி தலைமை வகித்தார். பஞ்., செயலாளர் கோவிந்தன், வி.ஏ.ஓ., ராஜேஷ் உட்பட, அனைத்துதுறை அலுவலர்கள் பங்கேற்றனர். 10க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதில், கிராம பொதுமக்கள், இளைஞர்கள், மகளிர் ஆகியோர் குடிநீர், சாக்கடை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு, அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இவர்களிடம் போலீசார் சமாதானத்தில் ஈடுபட்டனர். ஆனால், இவர்கள் தொடர்ந்து கேள்விகள் கேட்டபடி இருந்தனர். கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் திணறிய அதிகாரிகள், வரவு செலவு கணக்குகளை, கடந்த, இரண்டு மாதங்களுக்கும் மட்டும் படித்து காட்டினர். இதை ஏற்றுக்கொள்ளாத மக்கள், மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தங்களது, எட்டு கோரிக்கைகளை தீர்மானமாக வைக்க முறையிட்டனர். இதை ஏற்றுக்கொள்ளாத அதிகாரிகள், கூட்டத்தை பாதியில் நிறுத்தி விட்டு கலைந்து சென்றனர். இதேபோல், தர்மபுரி அடுத்த நார்த்தம்பட்டி பஞ்.,ல் நடந்த கிராமசபை கூட்டத்தில், இப்பஞ்.,ல் உள்ள ஏரிகோடிப்பட்டியில், கடந்த, மூன்று ஆண்டுகளாக ஆழ்துளை கிணறு மற்றும் குடிநீர் தொட்டிகளில் தண்ணீர் வருவதில்லை எனக்கூறி, பஞ்., செலயாளர் ரூபாவதியிடம், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X