சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சரக்கு வாகனம் கவிழ்ந்த விபத்தில் டிரைவர் உட்பட 25 பேர் காயம்

Added : ஆக 16, 2019
Advertisement

பாப்பாரப்பட்டி: பாப்பாரப்பட்டி அருகே, துக்கம் விசாரித்து விட்டு, ஊர் திரும்பிய போது, டாடா ஏஸ் வாகனம் கவிழ்ந்த விபத்தில், ஓட்டுனர் உட்பட, 25 பெண்கள் காயம் அடைந்தனர்.
தர்மபுரி மாவட்டம், பாப்பாப்பாரப்பட்டி அருகே, திருமல்வாடி அடுத்த மணல்பள்ளத்தில், விவசாயி தேவராஜ், 55 என்பவர் நேற்று முன்தினம் இறந்தார். இந்த துக்க நிகழ்ச்சிக்கு, நேற்று பனைகுளம் பஞ்., வத்திமரதஹள்ளியை சேர்ந்த, 25 பெண்கள், டாடா ஏஸ் சரக்கு வாகனத்தில் சென்றுவிட்டு ஊர் திரும்பினர். வாகனத்தை அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம், 33 என்பவர் ஓட்டினார். பகல் 12:30 மணியளவில், நாகமரத்துபள்ளம் பகுதியில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலையில் கவிழ்ந்தது. இதில், ஓட்டுனர் உள்பட, 25 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள், பாலக்கோட்டிலும் பின், தர்மபுரி அரசு மருத்துவமனைலும் சேர்க்கப்பட்டனர். இதில், கந்தம்மாள், 35, கமலா, 50, மல்லிகா, 55, லட்சுமி, 40 ஆகியோர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பென்னாகரம் எம்.எல்.ஏ., இன்பசேகரன், காயம் அடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். விபத்து குறித்து, பாப்பாரப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X