பொது செய்தி

தமிழ்நாடு

சரக அளவிலான விளையாட்டு போட்டிகள்

Added : ஆக 16, 2019
Advertisement

கிருஷ்ணகிரி: குந்தாரப்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில் சரக அளவிலான விளையாட்டு போட்டிகள் நடந்தன. மாவட்ட விளையாட்டு அலுவலர் வளர்மதி போட்டிகளை துவக்கி வைத்தார். உதவி தலைமை ஆசிரியர் அண்ணாதுரை முன்னிலை வகித்தார். வாலிபால், பேட்மிண்டன் போன்ற விளையாட்டு போட்டிகள் நடந்தன. இதில், சூளகிரி சரகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெற்றனர். பள்ளி தலைமை ஆசிரியை கலாவதி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X