சம்பவம் செய்தி

தமிழ்நாடு

யானை தாக்கி விவசாயி பலி

Added : ஆக 16, 2019
Advertisement

ஓசூர்: தமிழக- கர்நாடகா மாநில எல்லையில், யானை தாக்கி விவசாயி பலியானார். கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வனச்சரக, பாகலூர் சுற்று வட்டாரத்தில் கடந்த, 20 நாட்களுக்கு மேலாக இரு யானைகள் சுற்றித்திரிந்தன. அவை, தமிழக எல்லையான சிங்கசாதனப்பள்ளி இருந்து, நேற்று கர்நாடகா மாநில வனப்பகுதிக்கு விரட்டப்பட்டன. கர்நாடகா மாநில எல்லையான முகளூரிலிருந்து, திருரங்கம் பகுதிக்கு இரு யானைகளையும், கர்நாடக வனத்துறையினர் நேற்று முன்தினம் மதியம் விரட்டினர். அப்போது, வேடிக்கை பார்க்க சென்ற, திருரங்கத்தை சேர்ந்த விவசாயி அன்னையப்பா, 50, என்பவரை, யானைகள் தாக்கின. இதில், சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X