பொது செய்தி

தமிழ்நாடு

புகார் பெட்டி - நாமக்கல்

Added : ஆக 16, 2019
Advertisement

சாலையில் குவிந்த மணலால் விபத்து: குமாரபாளையம், பஸ் ஸ்டாண்டிலிருந்து வாகனங்கள் வெளியே வரும் வழியில், அதிகளவிலான மணல் குவிந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த மழை காரணமாக, மழை நீரில் அடித்து வரப்பட்டு இங்கு சேர்ந்துள்ளது. போக்குவரத்து மிகுந்த இந்த சாலையில் மணல் குவியலால் இரு சக்கர வாகன ஓட்டிகள், சைக்கிளில் செல்வோர் நிலை தடுமாறி கீழே விழும் நிலை உள்ளது. அசம்பாவிதம் ஏற்படும் முன் அகற்ற வேண்டும்.

- கே.சிவரஞ்சினி, குமாரபாளையம்.

குப்பையை அகற்ற வேண்டும்: குமாரபாளையம், வாரச்சந்தை அருகே அதிகளவிலான குப்பை கொட்டப்பட்டு, பல நாட்களாக எடுக்கப்படாமல் உள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, கடை வியாபாரிகள், குடியிருப்பு வாசிகள் என பல தரப்பினரும் அவதிக்கு ஆளாகின்றனர். கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி பல நோய்கள் ஏற்பட காரணமாக உள்ளது. பலருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த குப்பையை தினமும் அகற்ற வேண்டும்.

- செ.பிரகாஷ், குமாரபாளையம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X