பொது செய்தி

தமிழ்நாடு

2,000 மரக்கன்று நடவு விழா

Added : ஆக 16, 2019
Advertisement

ப.வேலூர்: நாமக்கல் மாவட்டத்தில் சுற்றுச்சூழலை வலியுறுத்தி அனைத்து பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி சார்பில் பல்வேறு பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்படுகின்றன. நீர் மேலாண்மை (ஜல் சக்தி அபியான்) திட்டத்தின் ஒரு பகுதியாக மரக்கன்றுகளை நடவு செய்வதால் மழைவளம் அதிகரித்து, நிலத்தடி நீராக மழைநீர் சேமிக்கப்படுகிறது. மேலும் ஒவ்வொரு பேரூராட்சிகளிலும் புங்கன், வாகை, வேம்பு, சரக்கொன்றை, பூவரசன் உள்ளிட்ட, 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளன. நேற்று, சுதந்திர தினத்தை முன்னிட்டு இத்திட்டம், ப.வேலூர், பொத்தனூர் மற்றும் பரமத்தி டவுன் பஞ்.,களில் முதற்கட்டமாக, 2,000 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. நிகழ்ச்சிக்கு செயல் அலுவலர்கள் ப.வேலூர் சண்முகம், பொத்தனூர் கீதா மற்றும் பரமத்தி ராஜசேகரன் தலைமை வகித்தனர். அலுவலக மற்றும் துப்புரவு பணியாளர்கள் மரக்கன்றுகளை பல்வேறு பகுதிகளில் நடவு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X