பொது செய்தி

தமிழ்நாடு

வாய்க்கால் தண்ணீர் பள்ளிபாளையம் வருகை

Added : ஆக 16, 2019
Advertisement

பள்ளிபாளையம்: மேட்டூர் கிழக்குகரை வாய்க்காலில், பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர், நேற்று பள்ளிபாளையத்திற்கு வந்தது. மேட்டூர் கிழக்குகரை வாய்க்காலில் தண்ணீர் வரும் போது, பள்ளிபாளையம், களியனூர், சமயசங்கிலி, எலந்தகுட்டை, ஆலாம்பாளையம், மோளகவுண்டம்பாளையம் மற்றும் பல பகுதிகளில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. பாசனத்திற்கு வாய்க்காலில், மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இது, நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, பள்ளிபாளையம் எல்லையை வந்தடைந்தது. விவசாயிகளும், பொதுமக்களும் கற்பூரம் ஏற்றி வரவேற்றனர். கடந்தாண்டு ஜூலை மாதம், பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு, ஜனவரியில் நிறுத்தப்பட்டது. ஏழு மாதங்களுக்கு பிறகு மீண்டும் பாசனத்திற்கு தண்ணீர் வந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சிடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X