பொது செய்தி

தமிழ்நாடு

ஓய்வூதிய நிலுவை தொகை உடனே வழங்க கோரிக்கை

Added : ஆக 16, 2019
Share
Advertisement

ராசிபுரம்: நிலுவை தொகையை உடனே வழங்க, ஓய்வூதியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க மாதாந்திர கூட்டம் ராசிபுரத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். சங்கத்தின் முன்னாள் மாநில தலைவர் கண்ணன் உருவப்படத்தை, எம்.பி., சின்ராஜ் திறந்து வைத்தார். புதிய மாவட்ட, ராசிபுரம் வட்டார பொறுப்பாளர்கள் பொறுப்பேற்றனர். 70 வயது கடந்த ஓய்வூதியர் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரருக்கு, 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஏழாவது ஊதியக்குழுவின், 21 மாதங்களுக்கு உரிய ஓய்வூதிய நிலுவை தொகையை வழங்க வேண்டும். ஓய்வூதியர் பிரச்னையை தீர்க்க தனி அமைச்சகம் அமைக்க முதல்வரை கேட்டுக்கொள்வது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X