பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - நாமக்கல்

Added : ஆக 16, 2019
Advertisement

புதிய சாலையாக மாற்ற வேண்டும்: குமாரபாளையம், நகராட்சி அலுவலகம் அருகே, பழைய காவிரி பாலத்தில் உள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளது. வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைய நேரிடுகிறது. குழிகள் இல்லாத இடங்களில் வாகனத்தை ஓட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன், நடந்து செல்வோர் மீது மோதும் நிலை ஏற்பட்டு பலரும் அவதிக்குள்ளாகின்றனர். பவானியை இணைக்கும் சாலை என்பதால், இந்த சாலையை புதிய சாலையாக மாற்ற வேண்டும்.
காலியான வீடுகள் அகற்றப்படுமா? பள்ளிபாளையம், காவிரி ஆற்றோரத்தில் தடுப்பணை நீர்த்தேக்க பகுதியால் பாதிக்கப்பட்ட வீடுகளில் வசித்த பொதுமக்கள் மாற்று இடத்திற்கு சென்று விட்டனர். கடந்த எட்டு ஆண்டுகளாக, இது சேதமடைந்துள்ளது. இங்கு, எந்நேரமும் சிலர் கும்பல், கும்பலாக நிற்பதால், ஆற்றுக்கு மற்றும் கோவிலுக்கு வரும் மக்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சேதமடைந்த வீடுகளை அகற்ற, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரதான சாலையில் வேகத்தடை தேவை: மல்லசமுத்திரம் பஸ் ஸ்டாண்டிலிருந்து, சேலம் செல்லும் சாலையில் உள்ள மோரிமேடு பஸ் நிறுத்தம் பள்ளமாக உள்ளது. இச்சாலையில் அசுரவேகத்தில் வரும் வாகனங்கள், வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல், எதிரே வரும் வாகனங்களின் மீது மோதி எதிர்பாராத விதமாக அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இதுகுறித்து, பகுதியினர் அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை நடவடிக்கை இல்லை. இப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும்.

ஆகாய தாமரை செடி அகற்ற வலியுறுத்தல்: மல்லசமுத்திரம் அருகே, மாமுண்டி கிராமத்தில் செல்லும் திருமணிமுத்தாற்றில் பல ஆண்டுகளாக ஆகாயத் தாமரை செடிகள் காணப்படுகின்றன. அடர்ந்த செடியாக இருப்பதால் சூரிய ஒளி நீருக்குள் ஊடுருவ முடியாமல் மற்ற நீர்வாழ் தாவர இனங்கள் மற்றும் உயிரினங்களின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளது. கொசுக்கள் உற்பத்தியாக ஏற்ற சூழல் உள்ளதால், தொற்றுநோய் பரவ வாய்ப்புள்ளது. இச்செடிகளை முற்றிலுமாக அகற்ற வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாதுகாப்பற்ற மின்மாற்றி: குமாரபாளையம், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சுவர் அருகே மின்மாற்றி உள்ளது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் தினமும் சென்று வருகின்ற சாலை. அதிக தொழிற்கூடங்கள் உள்ள பகுதி என்பதால் மக்கள் நடமாட்டம் மற்றும் வாகன போக்குவரத்தும் அதிகம். இந்த வீதியில் எவ்வித பாதுகாப்புமின்றி மின்மாற்றி உள்ளது. கால்நடைகளும் சுற்றி வருகின்றன. அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. மின்மாற்றியை சுற்றிலும் வேலி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X