பொது செய்தி

தமிழ்நாடு

தலைமலை பெருமாள் கோவிலில் பவுர்ணமி கிரிவலம் துவக்கம்

Added : ஆக 16, 2019
Advertisement

நாமக்கல்: தலைமலை சஞ்சீவிராய பெருமாள் கோவிலில், நீண்ட தூர கிரிவலம் துவங்கப்பட்டது. சேந்தமங்கலம் தாலுகா, வடவத்தூரில், 2,700 அடி உயரத்தில் பிரசித்திபெற்ற தலைமலையை சுற்றி பவுர்ணமி முதல் கிரிவலம் நேற்று துவங்கப்பட்டது. தலைமலை சேவா டிரஸ்ட் சார்பில், அதிகாலை, 5:45 மணிக்கு யாக பூஜை நடந்தது. காலை, 7:30 மணிக்கு கிரிவலம் துவக்கப்பட்டது. 27 கி.மீ., கொண்ட கிரிவலப்பாதையானது வடவத்தூர் கிராமத்தின் மலையடிவாரத்தில் துவங்கியது. பெருமாள் வாகனமான வெண்குதிரை முதலில் நடக்க, அதன் பின்னால் அனைவரும் அணிவகுத்து சென்றனர். பக்தர்களுக்கு காலை உணவு, மதிய உணவு வழங்கப்பட்டது. நடைபாதை இடையில் மோர் உள்ளிட்ட உணவு பொருள்கள் வழங்கப்பட்டன. கோவில் பரம்பரை தர்மகர்த்தா நந்தகோபன், நிர்வாக அறங்காவலர் ராஜேஷ், எருமப்பட்டி ஜமீன்தார் சேகர், பக்தர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X