பொது செய்தி

தமிழ்நாடு

வரவு செலவு காட்டாத செயலாளர் மக்கள் கேள்வி கேட்டதால் பரபரப்பு

Added : ஆக 16, 2019
Advertisement

மோகனூர்: கிராம சபை கூட்டத்தில், வரவு-செலவு கணக்கை, ஊராட்சி செயலாளர் தாக்கல் செய்யாததால், மக்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
மோகனூர் ஒன்றியம், பேட்டப்பாளையம் ஊராட்சி, ஆர்.சி.பேட்டப்பாளையத்தில், நேற்று கிராமசபை கூட்டம் நடந்தது. துணை பி.டி.ஓ., அன்பழகன் தலைமை வகித்தார். கூட்டத்தில், ஊராட்சியில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து, செயலாளர் பரமசிவம் விளக்கினார். தொடர்ந்து, தீர்மானம் வாசிக்கப்பட்டது. பசுமை வீடு, தொகுப்பு வீடு திட்டத்தில், மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டது. கடந்த, 2018-19, சமூக தணிக்கை அறிக்கையை தாக்கல் செய்யவில்லை. இது குறித்து கேட்டபோது, செலவு கணக்கு எழுதாததால், தணிக்கை செய்யவில்லை என, கூறப்பட்டது. மேலும், 2018-19ம் ஆண்டில், 33 லட்சத்து, 88 ஆயிரத்து, 310 ரூபாய் வரவு வந்துள்ள நிலையில், செலவு, 55 லட்சத்து, 42 ஆயிரத்து, 818 ரூபாய் என, அரசு புள்ளி விபரத்தில் தெரிந்துள்ளது. இதுகுறித்து கேட்டபோது, ஊராட்சி செயலாளர் சரியான பதில் அளிக்கவில்லை. ஆனால், 2017-18ம் ஆண்டு வரவு-செலவு கணக்கு தாக்கல் செய்தனர். அதில், தெருவிளக்கு எரியாத நிலையில், பழுதடைந்த விளக்கை அகற்ற, 2,000 ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதிர்ச்சியடைந்த மக்கள், புதிய விளக்கு வாங்கியிருக்கலாமே என கேள்வி எழுப்பினர். அதேபோல், சாக்கடை சுத்தம் செய்ய, 38 ஆயிரம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளிலும், சாக்கடை சுத்தம் செய்யாத நிலையில், எப்படி இவ்வளவு செலவு செய்யப்பட்டது என, மக்கள் கேள்வி எழுப்பினர். ஊராட்சி செயலாளர் பரமசிவம் எவ்வித பதிலும் அளிக்கவில்லை. அதனால், கிராம சபையில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X